பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306 ⚫ போதி மாதவன்

அதுபோலவே இந்தத் தருமத்திற்கும் விநயத்திற்கும் ஒரே சுவைதான் உண்டு–அதுவே விமுக்தி (நிருவாணம்). இது ஆறாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! பெரிய சாகரத்திலே முத்துக்கள், பலவிதமான மணிகள் நிறைந்திருக்கின்றன. அது போலவே, இந்தத் தருமத்திலும், விநயத்திலும் முத்துக்களும், பலவிதமான மணிகளும் நிறைந்திருக்கின்றன. அவைகளிலே சேர்ந்தவை நான்கு சதிப் பிரஸ்தானங்கள், நான்கு சம்யக் பிரதானங்கள், நான்கு ருத்திபாதங்கள், ஐந்து பலங்கள், ஏழு போத்தியாங்கங்கள், ஐந்து இந்திரியங்கள். அஷ்டாங்க மார்க்கம் ஆகியவை.[1] இது ஏழாவது குணம்.


  1. போதி அல்லது மெய்ஞ்ஞானத்தை அடைவதற்கு 37–தத்துவங்களைப் புத்தர் வகுத்துள்ளார். அவைகளைப்பற்றிய முழு விவரங்களும் அபிதம்ம பிடகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
    நான்கு சதிப் பிரஸ்தானங்கள்: உடல், உணர்ச்சி, சித்தம், நிருவாணம் (தருமம்) ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றிய உண்மைகள்.
    நான்கு சம்யக் பிரதானங்கள்: பாவம் வளராமல் தடுப்பதற்கும் நன்மையை வளர்ப்பதற்கும் உரிய நான்கு வகை முயற்சிகள்.
    நான்கு ருத்திபாதங்கள்: சித்தத்தின் இருத்தி ஆற்றலுக்கு அடிப்படைகள்: அடைய வேண்டும் என்ற நினைப்பு, முயற்சி, இதயப் பண்பாடு, ஆராய்ச்சி ஆகிய நான்கு.
    ஐந்து இந்திரியங்கள்: மனோ சக்தியின் வளர்ச்சிக்கு உரிய முறைகள் : சிரத்தை, வீரியம் (விடாமுயற்சி), ஞாபக சக்தி, சமாதி, பிரக்ஞை (மெய்யறிவு) ஆகிய ஐந்து.