பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 ⚫ போதி மாதவன்

மகதத்துடன் சேர்ந்துவிடாமல் தனித்திருப்பதற்காக எப்போதுமே விழிப்புடன் இருந்து வந்தனர். மகத மன்னரும், அவர்களுடைய படையெழுச்சி ஏற்பட்டால் தடுப்பதற்காகக் கோட்டை கொத்தளங்கள் அமைத்துக்கொண்டு, படைகளையும் தயாராக வைத்திருந்தார்.

வைசாலியைப் பற்றிய வரலாறுகள் யாவும் அந் நகரைப் ‘பூவுலகின் சொர்க்கம்’ என்று வருணிக்கின்றன . உயரமான அழகிய வீடுகளும், மாளிகைகளும், பூஞ்சோலைகளும், உபவனங்களும் அங்கே நிறைந்திருந்தன. இசைபாடும் பறவைகள் ஏராளமாக இருந்தன, லிச்சவி வகுப்பினர்கள் செல்வம் கொழித்துச் செழிப்புடன் இருந்ததால், அவர்களிடையே விருந்துகளுக்கும், விழாக்களுக்கும் குறைவேயில்லை. அங்கு சென்ற பிக்குக்கள், ‘தேவர் உலகிலேகூட இத்தகைய எழிலுள்ள நகரை நம் புத்தர் பெருமான் பார்த்திருக்கமாட்டார்!’ என்று புகழ்வார்களாம்.

அந்நகரம் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அமைக்கப் பெற்றிருந்ததாகவும். முதல் பிரிவில் செல்வர்களுடைய 7,000 வீடுகளும், இரண்டாம் பிரிவில் நடுத்தர வகுப்பாருடைய 14,000 வீடுகளும், மூன்றாரும் பிரிவில் ஏழைகளுடைய 21,000 வீடுகளும் இருந்ததாகவும் திபேத்திய ‘துல்வா’ என்ற நூலில் காணப்படுகின்றது. வைசாலி நகரத்துப் பெண்கள் அந்நகரத்திலுள்ள ஆடவரைத்தவிர வெளியிடங்களிலே திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

செல்வமும் செழிப்பும் பெற்றிருந்த வைசாலி நகரம் கூட ஒருகால் கொடிய பஞ்சம், நோய் முதலியவைகளால் துன்புறக்கூடும் என்று புத்தர் பெருமான் முன்னால் கூறியிருந்தார். ஒரு சமயம் அவ்வாறே அங்குப் பஞ்சமும், கொள்ளை நோயும் தோன்றிப் பல உயிர்களைப் பலி வாங்கிவிட்டன. அவ்வேளையில், மகரிஷிகள் சிலரை