பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320 ⚫ போதி மாதவன்

வருஷா காலம் முடிவடையும்பொழுது, பிக்குக்களும் பிக்குணிகளும் கூடிய சங்கத்தின் முன்பு, மற்றவர்கள் கண்டும், கேட்டும், சந்தேகித்தும் உள்ள விஷயங்களைப் பற்றிப் பிக்குணி விசாரணைக்கு உட்பட்டிருக்க வேண்டும்

பெருந்தவறு புரிந்துள்ள பிக்குணி, ஒரு பட்ச காலத்திற்குள் அதற்குப் பரிகாரம் தேடிக் கொண்டு, இருபாலாரும் கூடியுள்ள சங்கத்தின் நன்மதிப்பைப் பெற வேண்டும்.

இரண்டு வருஷா காலங்கள் முடிய இந்த விதிகளில் ஆறு விதிகளை முறையாகக் கடைப் பிடித்து வந்த பிக்குணி, பயிற்சி முடிந்து, இரு பாலாரும் சேர்ந்துள்ள சங்கத்திடம், பிக்குணிக் குரிய முழு அந்தஸ்தையும் பெறலாம்.

எக்காரணத்தையிட்டும் பிக்குணி ஒரு பிக்குவை ஏசவோ, கண்டிக்கவேர் கூடாது.

பிக்குணி பிக்குக்களிடம் பேசுதல் கூடாது; ஆனால், அவர்கள் அவளிடம் பேசலாம்.

ஆனந்தர் இந்த எட்டு விதிகளையும் கெளதமியிடம் போய்த் தெரிவித்தபோது, அவள் தன் உயிருள்ளவரையிலும் அவைகளைக் கடைப்பிடித்து வருவதாக உறுதி சொன்னாள்.

அவ்விஷயத்தை ஆனந்தர் ஐயனிடம் கூறித் ததாகதரின் தாயார் பிக்குணியாகி விட்டாள் என்றார். அப்போது பெருமான், பெண்களைச் சேர்க்காமலிருந்தால், தருமமும் சங்கமும் ஆயிரம் ஆண்டுக் காலம் நிலைத்திருக்கும்; சேர்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டதால்,