பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324 ⚫ போதி மாதவன்

போது பிம்பிசாரருடைய மகாராணியான க்ஷேமை என்பவளுக்கு அவர் தரும உபதேசம் செய்தார். அந்தச் சீமாட்டியின் பக்தி விசுவாசத்தைக் கண்டு அவர் அவளை மிகவும் உயர்ந்த முறையில் பாராட்டி வந்தார்

அக்காலத்தில் இராஜகிருகத்திலே ஒரு செல்வன் இருந்தான். அவன் ஒரு நாள், நதியில் குளித்துக் கொண்டிருக்கையில் சந்தனக் கட்டையிலே செய்த ஒரு திருவோடு நீரில் மிதந்து வந்தது அதை அவன் எடுத்துக் கொண்டு சென்று, தன் வீட்டு முன்வாயிலில் ஒரு மூங்கில் கழியிலே கட்டிவைத்து, உலகில் யாராவது அருகத்து இருந்தால், அவர் ஆகாய வழியாக வந்து அதை எடுத்துக் கொண்டு. போகலாம் என்று நகரெங்கும் விளம்பரம் செய்தான்.

அந்நகரில் அக்காலத்தில் பல சமயவாதிகள் தத்தம் மதமே சிறந்தது என்று வாதாடித் தீவிரமாகப் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அவர்களிலே எவரும் அந்தத் திருவோட்டை எடுக்கச் செல்லவில்லை. ஆனால் ஏழாவது நாளன்று, உபாதானம் எடுப்பதற்காக நகருட் சென்ற புத்தரின் சீடர்களான மௌத்கல்யாயனரும் பிண்டோல பாரத்துவாஜரும் அதைப் பற்றிய செய்தியைக் கேள்விப் பட்டுத் தமக்குள் ஆலோசனை செய்தனர். மௌத்கல் யாயனர், ஏற்கெனவே தாம் பிக்குக்களின் தலைவராயிருந்து புகழ் பெற்றிருப்பதால், தமது நண்பரே வான வழியாகப் பறந்து சென்று தமது ஆற்றலைக் காட்டிப் பரிசைப் பெற்று வரும்படி கூறினார். பாரத்துவாஜர் அவ்வாறே சென்று, பல ஜனங்கள் பார்த்து மெச்சும்படியாகத் தமது இருத்தி ஆற்றலைக் காட்டித் திருவோட்டைப் பெற்று வந்தார்.

இச்செய்தியைப் புத்தர் பெருமான் அறிந்ததும் மிக வும் வருந்தினார். எந்தப் பொருளைப் பெறுவதற்காகவும் பிக்குக்கள் இருத்தியை உபயோகித்தல் தகாது என்று