பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ⚫ போதி மாதவன்

செய்த செப்புக்கள், தேர்கள், யானைகள், மான்கள் குதிரைகள் முதலிய விளையாட்டுப் பொருள்கள் இளவரசற்காக வந்து குவிந்து கொண்டே யிருந்தன. முத்துச் சரங்களும் நவரத்தின மாலைகளும் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் விளங்கியதைக் கண்ட அன்னை கௌதமி, அவைகளிற் சிலவற்றைச் சித்தார்த்தனுக்கு அணிவித்து இனிபுற வேண்டுமென்று ஆசை கொண்டாள். அவ்வாறே மணி மாலைகளை அவன் கழுத்தில் அணி வித்துக் கைகளில் காப்பு முதலிய அணிகளையும் பூட்டினாள். பூணெல்லாம் பூண்ட புண்ணிய மூர்த்தியை அன்னை ஆவலோடு ஏறிட்டுப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்! எவ்வளவோ ஒளிவீசிக் கொண்டிருந்த மணிகளும் இழைகளும், சித்தார்த்தனின் உடலிற் சேர்ந்தவுடன், ஒளிமங்கிவிட்டன. அவன் உடலிலிருந்து விரிந்து பரவிய பேரொளியில் அணிகளின் ஒளி மறைந்து விட்டது! அந்த நேரத்தில் விமலையென்ற தேவதை அக்காட்சியைக் கண்டு களிப்புற்று, ‘உலகமெல்லாம் ஒளி நிறைந்த சாம்பூநதப் பொன்னால் இயன்றதெனினும், புத்தரின் ஒளியில் ஓர் இரேகையின் முன் அது ஒளியிழந்து நிற்கும்! தானே தனிச் சுடராக விளங்கும் புத்தனுக்குப் பொன்னும் மணியும் எதற்கு?’ என்ற பொருள்படப் பாடிக்கொண்டே, பிறர் கண்ணுக்குப் புலனாகாதபடி வான வீதியிலே பறந்து சென்றது. உடனே குழந்தைமீது மலர்மழை பொழிந்தது. கௌதமி, உண்மையிலேயே தன் செல்வனுக்கு அணிகள் அவசியமில்லையென்று உணர்ந்து, அவைகளைக் கழற்றி விட்டாள். அவனைப் பார்க்குந்தோறும், அவனைப்பற்றிச் சிந்திக்குந்தோறும், அவள் எல்லையற்ற இன்பமடைந்து வந்தாள்.

நடுகை விழா

சித்தார்த்தன் பிறந்து ஐந்து மாதங்கள் சென்றபின்பு, கபிலவாஸ்துவில் நடுகை விழாக் கொண்டாட ஏற்பாடா-