பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தொன்பதாம் இயல்

கடைசி யாத்திரை

‘மாரனை வெல்லும் வீர, நின்னடி,
தீ நெறிக் கடும்பகை கடிந்தோய், நின்னடி,
பிறர்க்(கு) அறம் முயலும் பெரியோய், நின்னடி,
துறக்கம்[1] வேண்டாத் தொல்லோய், நின்னடி,
எண்பிறக்(கு) ஒழிய இறந்தோய்,[2] நின்னடி,
கண் பிறர்க்(கு) அளிக்கும் கண்ணோய், நின்னடி,
தீ மொழிக்(கு) அடைத்த செவியோய், நின்னடி,
வாய்மொழி சிறந்த நாவோய், நின்னடி,
நரகர் துயர்கெட நடப்போய், நின்னடி,
உரகர் துயர(ம்) ஒழிப்போய், நின்னடி,
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்(கு)
அடங்காது!’

–மணிமேகலை

புத்ததேவரின் சரிதையிலே, அவர் மெய்ஞ்ஞானம் பெற்றபின் இருபத்தோராண்டுகள் வரை–அதாவது அவருடைய ஐம்பத்தாறாம் வயது வரையிலுமே–ஓரளவு வாழ்க்கைக் குறிப்புக்கள் தெரிந்திருக்கின்றன. அதன் பின்னர் அவரது எழுபத்தொன்பதாவது வயதுவரை, இருபத்து மூன்று ஆண்டுகளின் சரிதையைப் பற்றி எத்தகைய குறிப்புமே இல்லை ஆனால் அந்திம காலத்தில்


  1. துறக்கம்-சுவர்க்கம்; சுவர்க்க வாழ்வும் அழிவுள்ளதென்று புத்தர் அதையும் விரும்பவில்லை.
  2. எண் பிறக்கு ஒழிய இறந்தோய்-மனிதரால் எண்ண முடியாத அளவு உயர் நிலை அடைந்தோய்.