பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388 ⚫ போதி மாதவன்

வணங்கிவிட்டுப் பிரிந்து சென்று, சிறிது நேரத்திற்குப்பின் ஒரு மரத்தடியிற்போய் அமர்ந்து கொண்டார்.

அந்தச் சமயம் பார்த்துச் சீலவிரோதியாகிய மாரன் பகவரண்டையில் வந்து, அவர் உலகைப் பிரியவேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஞாபகப்படுத்தினான். பகவர் ஏராளமான பிக்குக்களைச் சீடர்களாகப் பெற்று, அவர்கள் தருமத்திலும் விநய விதிகளிலும் ஊறித் திளைக்கும்படியும், தருமத்தின் உதவியால் தவறான கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் பரிசீலனை செய்து ஒதுக்கித் தள்ளிவிட்டு உண்மையான மார்க்கத்தை அவர்கள் எங்கும் உபதேசம் செய்யும் வல்லமை பெறும்படியும் செய்து, பௌத்த தருமத்தை உலகிலே நிலை நிறுத்திய பின்பு பூத உடலை நீத்துவிடுவதாக முன்பு தன்னிடம் கூறியிருந்த தையும் அவன் எடுத்துக் காட்டி, ‘இப்போது தாங்கள் எண்ணியபடியே எல்லாம் நிறைவேறிவிட்டனவே!’ என்று கூறினான்.

மாரனுடைய மாற்றத்தைக் கேட்டதும், பெருமான், ‘தீவினையாள, பொறுமையோடிரு! ததாகதர் மகா-பரிநிருவாணமடைதல் நெடுந்தூரத்திலில்லை. இப்போதிலிருந்து மூன்று மாதங்கள் முடிந்ததும் ததாகதர் மகா-பரிநிருவாண மடைவார்!’ என்று பகர்ந்தார்.

இவ்வாறு பெருமான் தாம் நெடுங்காலம் வாழ்ந்திருக்கக் கூடிய எஞ்சிய வாழ்வு வேண்டாமென்று துறந்து விட்டார். அந்த நேரத்தில் பூமியதிர்ச்சி உண்டாயிற்று; பயங்கரமான இடியும் இடித்தது. மாரனும் மறைந்தான்.

‘முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்பட்டுச் செல்வது போல நான் விடுதலை பெற்றுச் செல்கிறேன். ‘எனக்குரிய வாழ்நாளை நான் தியாகம் செய்து விட்டேன்; இனிமேல் நான் சமாதியின் சக்தி கொண்டு வாழ்வேன். மான் உடல் பழுதுபட்ட இரதம் போல நிற்கின்றது. இனி “வருதல்",