பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 389

“போதல்” ஆகியவைகளுக்குரிய காரணம் யாதுமில்லை ![1] என்று பெருமான் அப்போது உலகுக்கெல்லாம் பொதுவாக அறிவித்தார்.

உலகின் உற்பாதங்களைக் கண்டு ஆனந்தர் அறவாழி அந்தணரை அணுகியபோது, அவர் மாரனுக்கும் தமக்கும் நிகழ்ந்த உரையை அறிவித்தார் மேலும் ததாகதர் சம்பந்தமாகப் பூகம்பங்கள் எவ்வெப்போது ஏற்படுகின்றன என்பதையும் விளக்கிக் கூறினார். ஆனந்தர் ஐயனுடைய முடிவான தீர்மானத்தை அறிந்து, அவர் அதனை மாற்றிக்கொண்டு உலகமுள்ளவரை இருக்க வேண்டுமென்று மன்றாடினார்.

‘போதும், ஆனந்தா! ததாகதரிடம் அதைக் கேட்காதே. ததாகதரிடம் அதை வேண்டிக்கொள்ளும் காலம் கடந்து விட்டது, ஆனந்தா!’ என்று போதிவேந்தர் மறுத்து விட்டார்.

உள்ளன்போடு உருகிநின்ற ஆனந்தர் ஒருகணமேனும் பெருமானின் பிரிவை எங்ஙனம் சகித்திருக்கமுடியும்? அவர் மீண்டும் இருமுறை வேண்டிப் பார்த்தார். ‘ததாகதரின் ஞானத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா?’ என்று கேட்டார் பகவர். சிறிது நேரத்திற்கு முன்னர் இருத்தி பாதங்கள் நான்கும் கைவரப் பெற்றவர், தாம் விரும்பினால், கற்பகாலம் வரை வாழ்ந்திருக்க முடியும் என்று பெருமான், அருளிய வாய்மையை ஆனந்தர் எடுத்துக் காட்டினார். அவர் தமது உள்ளக்கிடையை அறிந்து கொள்ளாமைக்குப் பெருமான் வருந்தினார்.

‘ஆனந்தா! ததாகதரின் ஞானத்தில் உனக்கு நம்பிக் கையிருந்தால், மூன்று முறைகளாகத் ததாகதரை நீ


  1. ஃபோ– ஷோ– ஹிங்– த்ஸாங்– கிங்.’