பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390 ⚫ போதி மாதவன்

சிரமப்படுத்துவானேன்? நமக்குப் பிரியமான சகல பொருள்களையும் நாம் விட்டுப் பிரிந்து செல்லத்தான் வேண்டும் என்பது இயற்கை என்பதை உனக்கு நான் முன்பு தெரிவிக்கவில்லையா? உலகில் பிறந்துள்ள, அல்லது தோற்றுவிக்கப்பட்ட, (ஸ்கந்தங்களாக) ஒன்று சேர்க்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் தானே உலைந்து மறையக் கூடிய இயற்கையைத் தன்னுள்ளே பெற்றிருக்கையில், ஆனந்தா, நான் எப்படி (உடலோடு) இருக்கமுடியும்? எனவே என்னுடைய இந்த உடல் மட்டும் உலையாமல் இருப்பது எப்படி முடியும்? அத்தகைய நிலைமை இருக்க ‘முடியாது! ஆனந்தா! அநித்தியமான வாழ்வு வேண்டாமென்று ததாகதர் உதறிவிட்டார்; தியாகம் செய்து விட்டார்; மறுத்துவிட்டார், தள்ளிவிட்டார்!’ என்று பகவர் மீண்டும் விளக்கிச் சொன்னார்.

இதற்குப் பின்பு பெருமானும் ஆனந்தரும் மகாவனத்திலிருந்த கூடகார விகாரைக்குச் சென்றனர். வைசாலியைச் சுற்றிச் சமீபத்தில் வசித்து வந்த பிக்குக்கள் யாவரும் அங்கு வந்து கூடினர். பெருமான் ஒரு பாயின் மீது எழுந்தருளியிருந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.

‘ஓ பிக்குக்களே! உங்களுக்குத் தருமத்தைப் பற்றித் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதை நீங்கள் (ஐயம்- திரிபு இல்லாமல்) பூரணமாகத் தெரிந்து கொண்டு, அதை அனுஷ்டிக்கவும்! அதைப் பற்றித் தியானம் செய்யவும்! உண்மையான சமயம் நெடுங்காலம் நிலைத்திருப்பதற்காகவும், பெருங் கூட்டமான மக்களுக்கு நன்மையும் இன்பமும் ஏற்படும்படியும், உலகின் மீது இரக்கம் கொண்டும், உயிர் படைத்த சகல ஜீவராசிகளின் நன்மைக்காகவும், ஆதாயத்திற்-