பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/411

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா-பரி-நிருவாணம் ⚫ 409

மானைப் பற்றிய செய்தியைக் கேட்டவுடனே அவர்கள் கூட்டம் கூட்டமாக உபவர்த்தனத்தில் சாலமரச் சோலையிலே வந்து கூடிவிட்டனர்.

பலர் அழுதனர்; பலர் துடித்தனர். ஆண்களும் பெண்களும், குழந்தைகளுமாக வந்திருந்த மல்லர்கள் அனைவரையும் சோகம் பற்றிக்கொண்டது. புனிதமூர்த்தி விரைவிலே பிரிந்து விடுவாரே என்றும், உலகின் பெருஞ் சோதி அணைந்து விடுமே என்றும் அவர்கள் அங்கலாய்த்தனர். அன்றிரவில் வெகு நேரம் வரை அவர்கள் சிறு சிறு கூட்டங்களாகச் சென்று சயனியத்திருந்த பகவரைக் கண் குளிரத் தரிசித்து வந்தனர்.

கடைசிச் சீடர்

அன்று பகவரிடம் கடைசியாக உபதேசம் பெறுவதற்காகக் குசீநகரவாசியான துறவி ஒருவரும் வந்து சேர்ந்தார். அவர் சுபத்திரர் என்ற பெயருடையார். தத்துவ விசாரத்தில் அவர் உள்ளத்தில் சில ஐயங்கள் ஏற்பட்டுக் கலக்கிக் கொண்டிருந்தன. ததாகதர் ஒருவரே அவர் சந்தேகங்களை நீக்க வல்லவர் என்றும், அன்றிரவு விடியு முன் ததாகதர் தேகவியோகமாவார் என்று மக்கள் கூறிய தால் விரைவாக அவரைச் சென்று காணவேண்டும் என்றும் கருதிய சுபத்திரர் வள்ளல் தங்கியிருந்த சோலைக்கு ஓடோடியும் வந்தார்.

அவர் வருகையை அறிந்த ஆனந்தர், பெருமானோடு அவர் விவாதம் செய்தால், இயற்கையாகவே தளர்ந்திருந்த ததாகதர் மேலும் நலிவுறுவார் என்று அஞ்சித் ததாகதர் நிலையை அவருக்கு உணர்த்த ஆரம்பித்தார்.

போ–26