பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் இயல்

மண வாழ்க்கை

‘நித்திய ஆனந்தத்தை–அரசே!
நீயும் அடைவதுண்டோ ?
சித்தத் தெளிவுடையாய்!–சிறிது
சிந்தனை செய்திடுவாய்.!

-ஆசியஜோதி

ளவரசனுக்குப் பதினெட்டு வயதான தும், அரசர் அவனுக்காக மூன்று பெரிய மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். ‘இராமவம், சுராமம், சுபதம் என்னும் பெயருள்ள மூன்று இணையற்ற மாளிகைகள் எனக்கு இருந்தன’[1] என்று பின்னால் புத்தர் பெருமானே குறிப்பிட்டுள்ளார். குளிர் காலத்தில் வசிப்பதற்குரிய மாளிகை யினுள்ளே சுவர்களில் தேவதாரு, சந்தனம் முதலிய மரப் பலகைகள் இழைத்துச் சேர்த்து வைக்கப் பெற்றிருந்தன. கோடை காலத்திற்குரிய மாளிகை பச்சை, நீலம் முதலிய கண்ணுக்கினிய நிறங்களுள்ள பளிங்குக் கற்களால் அமைக்கப் பெற்றது. வசந்த காலத்திற்குரிய மாளிகை செங்கல்லால் கட்டப் பெற்றது; அதன் மேல் முகட்டில் நீல ஓடுகள் பதிக்கப் பெற்றிருந்தன; சுற்றிலும் மலர்ச் செடிசுளும் கொடிகளும் நிறைந்த நந்தவனங்களும் இருந்தன.

மன்னரின் கவலை

சித்தார்த்தன் அடிக்கடி சிந்தனையில் ஆழ்ந்திருப் பதையும், அவன் முகத்தில் சோகம் படர்ந்திருப்பதையும்


  1. ‘புத்த வம்சம்’