பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ⚫ போதி மாதவன்

ஏழாம் நாளில் அரசர் பெருமான் மைந்தனைக் கண்டு அவன் தீர்மானத்தை அறிய விரும்பினார். சித்தார்த்தன் தான் மணஞ் செய்து கொள்வதாயிருந்தால், கீழ்க்கண்ட சிறப்புக்களெல்லாம் ஒருங்கே பொருந்தியுள்ள ஒரு மங்கையையே செய்துகொள்ள முடியுமென்று கூறினான்.

‘நான் மணந்து கொள்பவள் கன்னிப் பருவத்து இளம் பெண்ணாயிருக்க வேண்டும்; நான் மணந்து கொள்பவள் அழகின் நறுமலராக விளங்க வேண்டும்; ஆயினும், அவள் இளமையால் ஏற்படும் ஆடம்பரமற்றியிருக்க வேண்டும்; அழகினாலே செருக்கடையாமலிருக்க வேண்டும், நான் மணந்து கொள்பவள் உடன் பிறந்த சகோதரிபோல் அன்புடையவளாயிருப்பாள்; எல்லா உயிர்களிடத்திலும் தாயைப் போல ஆதரவு காட்டுவாள்; பொறாமை அவள் அண்டையிலும் அணுகவொண்ணாது. அவள் தன் கணவனைத் தவிரக் கனவிலும் வேறொர் ஆடவனைக் கருதமாட்டாள். ஒருகாலும் மிடுக்கோடு அவள் பேசமாட்டாள், அடக்கமே அவன் அணியாக விளங்கும், குற்றேவல் செய்யும் பணிப் பெண்ணைப் போல அவள் பணிவுடனிருப்பாள், அவசியமானவை தவிர வீணாகத் தேவைகளைப் பெருக்கிக் கொள்ள மாட்டாள்; தனக்குக் கிடைத்த பாக்கியமே பெரிதெகன்று மன நிறைவு கொண்டிருப்பாள். மதுவகைகளை அவள் விரும்பாள். இனிப்புப் பண்டங்களிலே அவள் மனத்தைப் பறிகொடுக்கமாட்டாள். கானமும், கந்தப் பொருள்களும் அவளைப் பாதிக்க மாட்டா. ஆடல் பாடல்களிலும், விழாக் கொண்டாட்டங்களிலும் அவள் அலட்சியமாயிருந்துவிடுவாள். என் பணியாளர்களிடத்திலும், அவளுடைய பணிப்பெண்களிடத்திலும் அவள் அன்புடன் பழகுவாள். அரண்மனையில் அதிகாலையில் கண் விழிப்பவள் அவளாகவேயிருப்பாள்; இரவில் இறுதியாகத் துயில் கொள்பவளும் அவளாகவே