பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ⚫ போதி மாதவன்

காதலும் திருமணமும்

இடையில் இளவரசனுடைய பிறந்த நாளும் கிட்டி வந்தது. அன்று நகரிலுள்ள கன்னியர் அனைவருக்கும் அவன் பரிசுகள் அளிப்பதாயும், போட்டிகளில் வென்றவர்களுக்கு விசேடப் பரிசுகள் வழங்குவதாயும் நகரெங்கும் முரசறைவிக்கப் பெற்றது.

பிறந்த நாள் வைபவத்திலே சித்தார்த்தன் ஓர் அரியாசனத்தில் அமர்ந்து பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்தான். கபிலவாஸ்துவின் கன்னியர் பலரும் தோகை மயில்களைப் போல் அவனைச் சுற்றிக் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். திரும்பிய இடமெல்லாம் மைதீட்டப் பெற்ற வேல் போன்ற கண்கள்! கன்னங்கரிய கார்மேகம் போன்ற கூந்தல்கள்! சந்திர வதனங்கள்! வண்ண வண்ண மான பட்டுடைகளும், சல்லாக்களும், சால்வைகளும்! பயிர் பெற்று உலவிய அந்த அழகிய ஓவியங்கள் பரிசு பெறும்போது, இளவரசனை ஏறிட்டுப் பார்க்க நாணித் தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தன. சித்தார்த்தன் ஆடவர் திலகமாய்க் கம்பீரத்தோடு கொலு வீற்றிருந்தான். எனினும், அவன் முகத்தில் ஆசையின் சாயை தென்படவேயில்லை. பெருந்தவ முனிவன் மணிமுடியும் நல்லணிகளும் அணிந்து, சாந்தியோடு திகழ்வது போலவே அவன் காணப் பெற்றான். மானினம் துள்ளிவருவது போலவும், மயிலினம் ஆடி வருவது போலவும், பெண்கள் தொடர்ச்சியாக வந்து அவனிடம் பரிசுகள் பெறும்போது, ‘இவன் நமக்கு எட்டாத கனி!’ என்று எண்ணி அடக்கத் கோடு ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தனர்.

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அப்பால் கடைசி யாக யசோதரை வந்து கொண்டிருந்தாள். மான் மிரள்வது போன்ற அவள் விழிகளும், தண்ணொளி பரப்பிக்கொண்டிருந்த அவள் திருமுகமும், சித்தார்த்-