பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ⚫ போதி மாதவன்

காணப் போகிறோம்! உடனே இரதத்தை அரண்மனைக்குத் திருப்பி விடு!’ என்று கூறினார். அவனும் அவ்வாறே திருப்பிவிட்டான்.

அரண்மனையிலும் சித்தார்த்தரின் உள்ளம் அமைதி பெறவில்லை. எந்த நேரமும் ‘முதுமை, முதுமை, புதுமைப் பருவம்’ என்ற ஒன்றைப்பற்றியே அவர் சிந்தனை சென்று கொண்டிருந்தது. பல்லாண்டுகளாக படலைப் பற்றியோ, உயிரைப்பற்றியோ சிந்தனையற் மிருந்தவர் இப்போது அவைகளைப்பற்றியே ஆராய முற்பட்டார். இதனால், உள்ளத்தின் சாந்தி குலைந்து, சோகம் புகைந்து கொண்டிருந்தது. அரண்மனையிலுள்ள பலரும், எந்தப் பொருளும் அவருக்கு இன்பமளிக்க வில்லை. உண்ணாமலும், துயிலாமலும், அவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, இரவு முழுவதும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

அவருடைய சோகத்தையும், அதன் காரணத்தையும் அறிந்த சுத்தோதனர் மிக்க வருத்தமும் கவலையும் கொண்டார். எதைச் செய்தாவது கோமகன் சோகத்தை விரைவில் மாற்றவேண்டும் என்று இரவில் நெடுநேரம் ஆலோசனை செய்துகொண்டே கண்ணயர்ந்து விட்டார். துயிலின் நடுவே அவர் கண்ட கனவுகள் வேறு அவர் உள்ளத்தை உளையச் செய்தன. வெள்ளித் தந்தங்களுள்ள மலை போன்ற யானைகள் பத்து உலகம் அதிரும்படி, சுற்றி வருவது போலவும், அவைகளில் ஒன்றின் மீது சித்தார்த்தர் அமர்ந்து செல்வது போலவும், ஒளிவிடும் தங்கமும் மரத்தினங்களும் இழைத்த பெரிய திகிரி ஒன்று கருதற்கரிய சோகத்துடன் சுழல்வது போலவும், நான்கு வெள்ளைப் புரவிகள் பூட்டிய தேர் ஒன்றில் சித்தார்த்தர் எங்கோ சென்று கொண்டிருப்பது போலவும், இடி யோசைபோல் அதிரும்படி அவர் ஒரு பெரிய பேரிகையைக் கொட்டி முழக்குவது போலவும் அக்கனவுகளிலே பல காட்சிகள் தோன்றின.