பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 ⚫ போதி மாதவன்

‘சாவு என்பது இவனுக்கு மட்டுந்தானா? அல்லது எல்லோருக்குமே ஏற்படுவதா?

‘பிறந்தவர் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே. பலசாலிகள், வாலிபர்கள், வயோதிகர்கள்-யாராயிருந்தாலும் முடிவு இதுதான்!’

இதைக் கேட்டதும் சித்தார்த்தருக்கு மூச்சு விடுவதே கடினமாகிவிட்டது. ‘ஆள் பார்த்து உழலும் அருளில் கூற்றின்’ தன்மை அவருக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது. ஏற்கனவே துயருற்றிருந்த மனம் மேலும் கலங்கி விட்டது. பதறுகின்ற குரலில் சில வார்த்தைகளே அவருடைய தொண்டையிலிருந்து வெளிவந்தன. ‘உலக மக்களே! எவ்வளவு அநியாயமாக நீங்கள் ஏமாறியிருக்கிறீர்கள்! எந்த உடலும் சாம்பலாகி விடுவதை எல்லா இடங்களிலும் கண்ட பின்னரும், கருத்தேயில்லாமல் வரழ்கிறீர்களே! இதயம் என்பது கல்லா, கட்டையா? எல்லாம் மறையும் என்ற உண்மையைப் பற்றி அது ஏன் சிந்திப்பதில்லை?’ இவ்வாறு சொல்லிக்கொண்டே, அவர் வானத்தையும் பூமியையும் மாறிமாறிப் பார்வை யிட்டார். அந்தப் பார்வையிலிருந்து ஏதோ ஓர் உன்னத லட்சியம் அவர் உள்ளத்தில் உதயமாகியிருப்பது போல் தோன்றியது.

அன்று சித்தார்த்தர் கண்ட காட்சிகளின் முடிவில் நோயும் சாக்காடும் வந்து குறுக்கிட்டதை எண்ணி, எப்படியும் சோலையிலே சிறிது நேரம் தங்கியிருந்தால் அவர் உள்ளம் மாறிவிடும் என்று கருதிச் சந்தகன் அவரை வற்புறுத்தி அங்கே அழைத்துச் சென்றான்.

சித்தார்த்தரின் சோகம்

இயற்கை அழகு நிறைந்த சோலையிலே மன்னரின் ஆணைப்படி உதாயி[1] என்ற தோழன், ஆடல் பாடல்-


  1. உதாயி. அரண்மனைப் புரோகிதரின் மைந்தன்.