பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 81

களை நிறைவேற்றிக் கொடுக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக் கொண்டால், நான் வனம் செல்லமாட்டேன். என் வாழ்க்கையில் மரணம் நேரலாகாது; என் உடல் நலத்தை நோய்கள் கெடுத்தலாகாது; என் இளமையை முதுமை வந்து பாழாக்கக் கூடாது; என் இன்பத்னதப் பீடை எதுவும் குலைத்து விடக் கூடாது.’

வேந்தர், ‘வேண்டாம், கண்ணே! வேண்டாம்! நாட்டை விட்டு அகலும் எண்ணத்தை அகற்றி விடு. இயலாத செயல்களில் முனைந்து நிற்பது ஏளனமாகும்!’ என்று கூறிவிட்டு மௌனமாயிருந்தார்.

ஆனால் சித்தார்த்தரேர் மேரு கிரி போல் உறுதியுடன் நிமிர்ந்து நின்றார். ‘நான் கேட்டதைச் செய்ய இயலாது போனால், என் வழியைத் தடை செய்யலாகாது; தீப் பற்றி எரியும் வீட்டிலிருந்து தப்பி வெளியேறுதல் தீமையா? அப்படிச் செல்லும் ஒருவனைத் தடுத்து நிறுத்துதல் நியாயமன்று!’ என்று அவர் எடுத்துரைத்தார். உலகில் எல்லோரும் பிரிய வேண்டியவர்களே. முடிவான அந்தப் பிரிவை யாரும் தடைசெய்ய முடியாது. அதற்கு முன்னதாக, இப்போது பெரியதோர் இலட்சியத்திற்காக நானாகப் பிரிவை வேண்டுகிறேன்’ என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவருடைய உறுதியை அரசர் கண்டார். அவருடன் ‘மேற்கொண்டு வாதாடுவதில் பயனில்லை என்று கருதி, உன் பிரிவு உசிதமில்லை !’ என்று மட்டும் கூறி நிறுத்திக் கொண்டார். கனிகின்ற துயரோடு கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்த தந்தையைக் காணச் சகியாமல், சித்தார்த்தர் தமது அரண்மனைக்குத் திரும்பினார். சுத்தோதனர் முக்கியமான மந்திரிகள், பிரதானிகளை அழைத்துப்