பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 97

கொடுக்கும் திறனும் அவனிடம் இருந்தது. கடைசியாக அவர் நகரை நீங்கி வனத்தை அடைவதற்கும் அவன் ஒப்பற்ற உதவியைச் செய்து விட்டான். இதற்காக அவனைச் சித்தார்த்தர் பாராட்டினார். ‘உற்ற உறவினர் கூட ஒருவனுடைய அதிர்ஷ்டம் குறையும்போது வேற்றாராகி விலகிவிடுவர். நீயோ, பயன் கருதாமல், கடைசிவரை எனக்குப் பணிவிடை செய்து வந்திருக்கிறாய். உனக்கு நான் என்ன கைம்மாறு அளிக்க முடியும்?’ என்று கூறினார்.

இனி அவனை ஊருக்கு அனுப்பிவிட வேண்டும் என்று கருதி, ‘அன்பா! நீ என்னிடம் பேரன்பு கொண்டு உதவி புரிந்தாய்; இந்த உதவி உனக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்மை விளைவிக்கும். இனியும் நீ ஓர் உதவி செய்யவேண்டும். நான் அடையவேண்டிய வனத்தை அடைந்து விட்டேன். இனி நீ குதிரையை அழைத்துக் கொண்டு நகருக்குத் திரும்பிவிட வேண்டும்!’ என்று அவனைக் கேட்டுக்கொண்டார். அவர் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி அவனுக்குப் பரிசாக அளித்தார். அரச் உடையையும், மணிகள் இழைத்த அரைக் கச்சையையும், உடைவாளையும் சுழற்றிக் கொடுத்தார். பின்னர் மிகவும் ஒளிவீசிக் கொண்டிருந்த தமது முடி மணியையும் எடுத்து அவன் கையில் கொடுத்தார். அவர் கூறியதாவது:

‘சந்தகா! அரண்மனையிலே மன்னருக்குப் பன்முறை என் வணக்கம் கூறி, இம்மணியையும், மற்றவைகளையும் அவரிடம் எனக்காகச் செலுத்துவாயாக! அவர் துக்கத்தை ஆற்றி, மேற்கொண்டு என் பொருட்டாக வருந்த வேண்டாம் என்று சொல்லவும்.

‘சுவர்க்க ஆசையினால் நான் இங்கு வரவில்லை. முதுமையையும், மரணத்தையும் வென்று அழிப்பதற்-