பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-8-


புகுந்துவிடுவான்' என்று உறுதி கூறினார். இக்காலத்தும் இந்த உணர்வு இருக்கவேண்டும். இந்தச் செய்தியை காவற்பெண்டு பாடியுள்ள

"சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினும் அறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே"

என்னும் புறநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது.

மற்றொரு மறக்குல மடந்தையின் தமையன் முந்தா நாட் போரில் மடிந்தான்; அவள் கணவனோ நேற்றைய போரில் வீழ்ந்தான். இன்றும் போர் முழக்கம் கேட்கிறது. அந்தோ என் செய்வாள் அவள்! இன்றைக்கும் யாரையாவது போர்க்கு அனுப்ப வேண்டுமே! யாரை அனுப்புவது! தனக்கு இருப்பவனோ ஒரே மகன். அவனும் இளஞ் சிறான், விட்டாளா அவனை? வேல் ஒன்றை எடுத்து அவன் கையில் தந்தாள்; வெள்ளாடை உடுத்தினாள்; எண்ணெய் தடவி அவனது தலையை வாரிவிட்டாள். என் செல்வமே! போர்க்களம் நோக்கிச் செல்க என்று ஆணையிட்டு மகிழ்வுடன் அனுப்பினாள். இன்றைய தாய்மார்கள் அனுப்புவார்களா? அனுப்பக்கூடிய நெஞ்சுரம் இனி வேண்டும். இந்த மற நிகழ்ச்சியினை ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண் புலவரால் பாடப்பட்டுள்ள

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை யெறிந்து களத்தொழில் தனனே
நெருநல் உற்ற செருவிற் கிவள் கொழுநன்