பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

-11-

உவகை? நெடுநாள் பிள்ளையொன்றும் இல்லாதிருந்து இறுதி நாளில் கருவுற்றுப் பத்துத் திங்கள் வருந்திச் சுமந்து அந்த ஆண் மகனைப் பெற்றபோது அடைந்த பெருமகிழ்ச்சியினும் மாபெரும் மகிழ்ச்சியாம் இது! எனவேதான், 'ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே!' என்று பாடினார் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண் புலவர். ஒரு தாய் பிள்ளையைப் பெற்ற நேரத்தில் கொள்ளும் உணர்வையும் மற்ற நேரத்தில் கொள்ளும் உணர்வையும் பெண்பாற் புலவரே நன்கு புரிந்து உரைக்க முடியுமன்றோ?

வெட்கம்

ஈண்டு இத்தனை பாடற் கருத்துக்களும் எடுத்துரைக்கப்பட்டதேன்? பண்டு நம் நாட்டில் சிறார்களும் முதியோர்களும் பெண்டிர்களுங்கூடப் போர் முயற்சியில் பெரும் பங்கு கொண்டனர் என்பதைப் புலப்படுத்தவே இவ்வளவு எழுதவேண்டியதாயிற்று, பெண்களின் போரூக்கம் குறித்துப் பெண் புலவர்கள் கூறியுள்ள உள்ளம் உருக்கும் கருத்துக்களைப் படிக்கும் இக்காலத்தவர் தம் பின்தங்கிய நிலை குறித்து உண்மையில் வெட்கப்படாமல் இருக்க முடியாது.

விலைப்பொருள்

இந்தக் கருத்துக்களையெல்லாம் படித்தால் அல்லவா வீரம் பீரிட்டெழும்? நாம் நம்முடைய இந்தச் சொந்தச் சரக்குகளையெல்லாம் மறந்து இறக்குமதிச் சரக்குகளோடு அமைந்துவிட்டதனால்தான் இன்று வீரத்தை வெளியிலிருந்து விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. நாம் நமது பழைய வீர மரபை விட்டதனால்தான் இன்று நம் மக்கட்கு வீரத்தை வலிந்து 'நரம்பு ஊசி' வாயிலாக ஏற்ற வேண்டியதாயிற்று. இன்று விலைப் பொருளாகப் போய்விட்ட வீரம், அன்று நம் முன்னோர்