பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-17-


வரத்தான் செய்யும். இது போன்றதே போரூக்கமும் ! கை, கால், கண், காது. மூக்கு முதலிய எல்லா உறுப்புக்களும் சேர்ந்ததே ஒர் உடல் என்பதுபோல, பசியுணர்வு, காம உணர்வு, போர் உணர்வு முதலிய பல்வகை உணர்வுகளும் (lnstincts) உடையதே ஓர் உயிர் எனப்படுவது. இதனை உளவியல் (Psychology) கற்றார் நன்குணர்வர். எனவே, போர் உணர்வு இன்றி மக்கள் இல்லை. உலகில் என்றைக்கு இரண்டாவது மாந்தன் (மனிதன் தோன்றினானோ அன்றைக்கே போரும் தோன்றிவிட்டது. உலகில் கடைசி இரண்டு மாந்தர்கள் இருக்கும்வரை போரும் கட்டாயம் இருக்கும். எனவே தான், நாம் எல்லாருமே எப்போதுமே போருக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.

தேள் கடி மருந்து

போர் ஆயத்தம் செய்து வைத்துக்கொண்டு விட்டால் உடனே போர் புரிந்தாக வேண்டும் என்று பொருளில்லை. முன்கூட்டித் தேள் கடி மருந்து வாங்கி வைத்துக் கொண்டுவிட்டால், தேள் கொட்டாதா - தேள் கொட்டாதா என்று விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை; அல்லது நாமாக வலியச் சென்று தேள் கொடுக்கின்மேல் கையை வைக்கவும் வேண்டியதில்லை. தேள் கொட்டாதபடி விழிப்பாகத்தான் இருக்க வேண்டும். தப்பித் தவறித் தற்செயலாகத் தேள் கொட்டி விட்டால் உடனே அந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும். போர் ஆயத்தமும் தேள் கடி மருந்து போன்றதே!

சரி நிகர் பங்கு

போர் ஆயத்தம் என்றால்-போர் முயற்சி என்றால் பொருள் என்ன ? அரசினர் போர்த் தளவாடங்களை நிரம்பத் திரட்டிக் குவித்து வைத்திருப்பது மட்டும் போர் ஆயத்தம் ஆகாது. படை மறவர்கள் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு சிலரே போர்முனை புக்குப் போவது