பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-18-

மட்டும் போர் முயற்சி ஆகாது, நாட்டு மக்கள் அனைவருக்கும் போர் முயற்சியில் சரி நிகர் பங்கு இருக்க வேண்டும்.

போர் ஆயத்தம் என்ற பெயரில் நாட்டு மக்களின் நற்பணி யாது? அரசினர் போர்க் கருவிகளைச் செய்வதற்கும் வாங்குவதற்கும் பொருள் வளம் வேண்டுமே! அது மக்கள் கையிலேயே உள்ளது. போர்க்காலத்தில் மட்டுமன்று - எப்போதுமே, நாட்டு மக்கள் அனைவரும் அயராது நன்கு உழைத்தால்தான் நாட்டில் பொருள்வளம் கொழிக்க முடியும் எவரும் சோம்பியிருத்தலாகாது; எந்த வேலையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். சப்பானியரைப் பாருங்கள்: அவர்கள் சிறு சிறு தகரத் துண்டுகளைக் கூட சிதறவிடாமல் எவையேனும் செய்து கொண்டேயிருப்பார்களாம். நாமும் அப்படி அயராது உழைத்தால்தான் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி பெருகி நாட்டில் பொருள்வளம் நன்கு செழிக்கும். அப்போதுதான், இன்னொரு நாட்டின் உதவியை எதிர்பாராத இறுமாந்த நிலை நம் நாட்டிற்கு ஏற்படும்.

நாம் அனைவரும் கட்டுப்பாடாக நம் நாட்டுப் பொருள்களையே வாங்கவேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருள் நம் நாட்டினதாகக் கிடைக்கவில்லை யென்றால், தேவையைக் குறைத்துக் கொள்ள வேண்டும்-அல்லது நிறுத்திக் கொள்ளவேண்டும். அதனை நம் நாட்டிலேயே உண்டாக்க வேண்டும். அதற்கு அரசும் ஆவன செய்யவேண்டும. செய்யும், போர்க்காலத்தில் மட்டுமன்று. எப்போதுமே மேற்கூறிய,முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

அடுத்து, போர்க்காலத்தில் போர் முயற்சி என்னும் பெயரில் நாட்டு மக்களாகிய நமது பங்கு யாது?