பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



போர் முயற்சியில்

நமது பங்கு


முதற் கடமை

நமது தாய்த்திருநாடாம் இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பகைஸ்தானாக மாறிவிட்ட இந்நேரத்தில், எல்லையில் சீனம் மிரட்டிக்கொண்டிருக்கிற இந்நேரத்தில், இந்தியப் போர் மறவர்கள் பகைவருடன் கடும்போர் புரிந்து இந்தியாவின் பேராற்றலையும் பெரும் புகழையும் நிலைநாட்டிக்கொண்டிருக்கிற இந்நேரத்தில் நமது முதற் கடமை யாது? இந்தியப் பெருமக்கள் நாற்பத்தைந்து கோடியினரும் போர் மறவர்களாக மாறிவிடுவதே முதற் கடமையாகும். நாம் நாற்பத்தைந்து கோடியினரும் போர் மறவர்களாக மாறிவிட்டால், பாகிஸ்தானுக்கு எத்தனை சில்லரை நாடுகள் உதவி செய்யினும், எல்லாம் சேர்ந்தும் நம் ஒரு நாட்டிற்கு ஈடாகமுடியாது.

நாம் அனைவரும் போர் மறவர்களாக மாறுவதா என்று வியக்கவோ மிரளவோ ஒதுங்கவோ வேண்டா. இந்த முதற் கடமை, இந்தக்காலத்தில் நமக்கு வேண்டுமானால் புதிதாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில் நம்நாட்டு முன்னோர்கட்கு இந்தக் கடமை பிறக்கும் போதே குருதியில் (இரத்தத்தில்) ஊறிவிட்டிருந்தது.