பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு க னர். அன்றியும், இவர், பௌத்த மதத்தை மேற்கொண்டு, இந்தியா தேசத்திலும் அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் இந்தப் பௌதத மதததைப் பரவச்செய்தார். இவர் இந்தியா தேசத்தில் வெவ்வேறிடங்களில் எழுதுவித்துள்ள கலவெட் டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்கு உதவிசெய் கின்றன என்று சொன்னோம். சௌராஷ்டிர தேசத்தி லுள்ள கிர்னார் நகரத்துக்கருகில் உள்ள பாறையொன்றில் எழுதப்பட்ட அசோக சாசனத்தில் (Edict ii) கீழ்க்கண்ட பகுதி காணப்படுகின்றது: ' காருணயமுள்ள தேவனாம்பிரியராகிய அரசாபெருமா னுடைய (அசோகருடைய) ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களி இம், தாமிரபரணியிலும் (இலங்கை ), யவன அரசனாகிய அணடியொகஸ ஆட்சி செய்யும் தேசத்திலும், அதறகப் பாற்பட்ட தேசங்களிலும் சாருணயமும் மேனமையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், காலநடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத துவ நிலையங்களாம்' இந்தச் சாசன ததில, அசோக சக்கரவர்ததி தமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் மருத்துவ நிலையங்களை அமைத்தார் என்பது மட்டும் கூறப்படுகின்றது. ஆனால், கீழக்கணட இன்னொரு சாசன ததில, இவர் தமிழ் நாட்டில் பௌத்த மத்ததைப பரபபிய செய்தி காணப்படு கின்றது. பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படுகின்ற இந் தச் சாசனம (Rock Edict 11}), போர்செய்து பலரைக் கொன்று அதனால் பெறும் மறவெற்றியைவிட, அறதகைப்