பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும் லது மகேந்திரர் என்பவரை இலங்கை நூல்கள் அசோக ரது மகனார் என்று கூறுகின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள நூல்கள் இவரை அசோகாது தம்பியார் என்று கூறு கின் றன. மகனாராயினும ஆகுக, தம்பியாராயினும் ஆகுக, இந்த மகேந்திரா அசோகரால் அனுப்பப்பட்டவர் என்பது மட்டும் உறுதி. அன்றியும், இவருடன் இலங்கைக்கு வந்த வர்களில் ஒருவரான சாமனர சுமணர் என்பவர் அசோக மன்னரது பெண் வயிற்றுப் போர் என்பதும் எண்டுக்குறிப் பிடத்தக்கது. இந்த மகேந்திரரும் அவரைச்சேர்ந்த ஐந்து பிக்குகளும் கி. மு. உரும- இல இலங்கைக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனால், அசோக மன்னர் காலத்தில் மகிந்தர் அல்லது மகேந்திரர் என்பவரால் இலங் கைத்தீவில் பௌத்தமதம் பரவியது என்றும், அதே காலத் திலதான் இலங்கையையடுத்த தமிழ் நாட்டிலும் இந்த மதம் முதல் முதல் வந்திருக்கவேண்டும் என்றும் துணிய லாம். மகேந்திரா தமிழ் நாட்டில் வந்து பௌத்த மதததைப் போதித்ததாக இலங்கை நூல்கள் கூறவில்லை. பணடைக் காலத்தில் தமிழர் இலங்கை மேல படையெடுத்துச்சென்று அடிக்கடி அந்நாட்டைக கைப்பற்றி அரசாண்டு வந்தபடியா லும் , அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான இலங்கையருக கும் போர் நிகழ்கதுவந்தபடியாலும், மகேந்திரர் தமிழ் நாட் டில பௌத்தமதததைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள் பகைமை காரணமாகக கூறாமல் விட்டன என்று உவின்சென்ட் ஸ்மித எனனும் ஆசிரியர் தமது ‘பழங்கால இந்தியா' எனனும் நூலில் கூறுகின்றார். இவர் கருத தையே ஆராய்ச்சியாளரும் ஒப்புககொளளுகின் றனர். வட இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரா