பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு கடல் வழியாகக் கப்பலில் பிரயாணம் செய்திருக்கவேண்டும் என்றும், அவவாறு கடல் பிரயாணம் செய்தவர் இலங்கைக் குச்செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்துப் பேர் பெற்று விளங்கியதுமான காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக் கூடுமென்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப் பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ் நூல் களில் கூறப்படும் இந்திர விகாரைகளென்றும் மேல் நாட்டுக் கீழ் நாட்டு ஆராய்ச்சியாளர் ஒரு முகமாகக் கூறுகின்றனர். அசோக மன்னர் காலத்தில் அவரால் அனுப்பப்பட்ட மகேந்திரரால் தமிழ் நாட்டில் பௌத்த மதம் பரவியது என்பதை வற்புறுத்தும் மற்றொரு சான்றும் நமக்குக்கிடைத் திருக்கினறது. யுவாங்-சுவாங் என்னும் சீன தேசத்துப் பௌத்த யாத்திரிகர் கி. பி. கச0-இல் தமிழ் நாட்டிற்கு வந்தபோது, பாண்டிய நாட்டு மதுரை மாநகரின் கீழ்ப்புறத் தில் அசோகரது உடன் பிறந்தவராகிய மகேந்திரரால் கட்டப்பட்ட ஒரு பௌத்தப்பளளியும், இந்தப்பள்ளிக்குக் கிழக்கில அசோக சக்கரவர்த்தியால அமைக்கப்பட்ட ஒரு விகாரையும் இடிந்து சிதைந்து போன நிலையில் காணப் பட்டனவாகத தமது யாததிரைக்குறிப்பில எழுதியிருக் கின்றார். அன்றியும், காஞ்சீபுரத்திலும் அசோக மன்னர் கட்டிய ஒரு தூபி இருந்ததென றும் அவரே குறிப்பிட்டிருக் கின்றார். ஆனால, இவா குறிப்பிடுகின்ற பௌத்தக் கட்டிடங் களைப்பற்றித தமிழ் நூலகள் ஒன்றும் கூறவில்லை. மகேந்திரர் இலங்கையில் பௌத்த மதத்தைப் போதித்தபோது, இலங்கையரசனுடைய மாமனாரான அரிட்டா என்பவர் அந்த மதததை மேற்கொண்டு துறவு பூண்டு பிக்குவானா. இந்த அரிட்டர் இலங்கை முழுவதும்