பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமதம் மறைந்த வரலாறு

க௩

ருக்கவேண்டும். அக்காலத்தில், வடநாட்டு மதங்களினின்று வேறுபட்டதும் தனிப்பட்டதுமான ஒரு மதத்தைத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். வடநாட்டு மதங்களின் தொடர்பற்ற புராதன மதமாக இருந்தது அக்காலத்துத் தமிழர் மதம்.

வட நாட்டினின்று தெனனாடு போந்த மேற்கூறிய நான்கு மதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கையுடையவை; ஒனறோடொன்று பெரும்பகை கொண்டவை. இந்த மதங்கள் செற்றங்கொண்டு ஒன்றையொன்று அழித்தொழிக்க அற்றம் பார்த்திருந்தன. அமைதியாக வாழத் தெரியாமல், ஒன்றையொன்று இழித்துப் பழிததுப்பேசி வந்தன. அமைதியாக இருந்த தமிழ் நாட்டில் இந்த வட நாட்டு மதங்கள் வந்து சமயப்பூசல்களைக கிளப்பிவிட்டன. தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்களைத தத்தம் மதத்தில் சேர்தது, தத்தம் மதத்திற்குச் செல்வாக்கும் சிறப்பும் தேடிக்கொள்ள இந்த மதங்கள் முயற்சி செய்தன. பொது மக்களின் அனபையும் ஆதரவையும் பெறவும், அரசர்களையும், செல்வந்தர்களையும் வசப்படுததிச் செல்வாக்கடையவும் இவை முயன்றன. தமிழர் கொண்டாடும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் தக்க அமயமாகக கொண்டு இந்த வட நாட்டு மதங்கள தததம கொளகைகளைத் தமிழ்மக்களுக்குப் போதிததுவந்ததாகத தெரிகின்றது. இவ்விதச் சமயப் போட்டியில் செற்றமும் கலகமும் ஏற்பட்டன. இந்தக் கலகங்களை அடக்க அரசன் தலையிடவேண்டியதும் ஆயிற்று. ' ஒட்டிய சமயத அறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிக தேறுமின் ; பற்றா மாககள தம்முட னாயினும், செற்றமுங் கலாமுஞ செயயா தகலுமின்'