பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அதிகாரம்.

பௌத்த திருப்பதிகள்.

தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந் தோம். பொதுவாகத் தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்றிருந்த தென்றாலும், சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களி லும் செல்வாக்குற்றிருந்தது என்பதை ஈண்டு ஆரோய் வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப் பதிகளைக் கூறுவோம்.

காவிரிப்பூம்பட்டினம் : சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் காலமுதல் பௌததர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்யாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாளிமொழியில் உள்ள பௌதத நூல்களில் இப்பட்டினம் ' கவீரப்பட்டினம்' என்று கூறப் பட்டுள்ளது. மிகப்பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ்) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி, அல்லது அகிததி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வததைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தா ரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திர ளான மக்கள் அங்குச் சென்று வந்ததால், அவரது தவத்