பக்கம்:பௌத்த தருமம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

95


சொல்லப்பெறும் தாதுப் பொருள்கள், அல்லது மூலப் பொருள்கள், ஒன்றுசேர்ந்து பரிணமிப்பதற்குரிய நியதியே காரணமாயுள்ளது. 'அது இருப்பதால், இது இருக்கிறது; அது உண்டாகியிருப்பதால், இது உண்டாகியுளது' என்ற முறையில் காரண காரியத் தொடர்பாகவே, ஒன்றைக் காரணமாகக் கொண்டு ஒன்று தோன்றுவதாகவே, புத்தரும் விளக்கியுள்ளார்.

இதனாலேயே,

துக்கமே உளது, துக்கிப்பவன் இல்லை;
செயல் உளது, செய்பவன் இல்லை;
நிருவாணம் உளது. நிருவாணாமடைபவன் இல்லை;

மார்க்கம் உளது, அதில் செல்வோன் இல்லை'

[1]

என்று சொல்லப்படுகின்றது.

மற்றைப் பொருள்களைப் போலவே, உடலும் மனமும் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இந்த மா ற் ற த் தி ல் ஒருபுறம் புதுவளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டேயிருக்கின்றது; மறுபுறத்தில் பழையன அழிந்து கொண்டேயிருக்கின்றன. ஒரே உடலில் இந்த மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதையும், மாற்றம் வெகு விரைவாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதையும் கொண்டு, நாம் மாற்றமே இல்லாதது போன்ற எண்ணத்தைப் பெறுகிறோம். 'ஒரு விளக்கில் தீபச்சுடர் எரிகின்றது. இரவு முழுதும் எரிவது ஒரே சுடர் அன்று; கணந் தோறும் சுடர் மாறிக்கொண்டே வந்த போதிலும்,


  1. 'விசுத்தி மார்க்க'த்தில் புத்தகோஷர் குறித்துள்ள மேற்கோள் செய்யுள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/100&oldid=1386940" இலிருந்து மீள்விக்கப்பட்டது