பக்கம்:பௌத்த தருமம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 99 கத்திலும் தன்னை 'நான்' என்றே குறிப்பிடுவதால், நாம் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது. மு. த லி ல் " நான் ' என்று குறிப்பிட்ட குழந்தைப் பருவமே போய்விட்டது; வயோதிகத்தை இப்போது நான் ' என்று குறிப்பிடுகிருன். அதாவது "நான் என்பதன் தன்மை - உட்பொருள் - மாறிவிட்டது; பெய ரளவிலேயே அது பொருத்தமா புள்ளது. மனம் என்பது தனியான ஓர் அவயவம் அல்லது அங்கமன்று. சிந்தனை செய்யும் முறை, சிந்தணு சக் தி யை யே மனம் என்று கருதுகிருேம். ஜடப் பொருளும் இந்தச் சிந்தணுசக்தியாகிய உணர்வும் ஒன்று சேர்ந்தே மனிதன் உண்டாகிருன். மஞே, தருமங்கள் அல்லது சித்தவிருத்திகளின் தொகுதியே மனம் என்றும், அறிவு, உணர்வு, இச்சா சக்தி என்பவை அம்மனத்தின் உட்பிரிவுகள் என்றும் நவீன உளநூல் ஆ சி ரி ய ர் க ளு ம் கூறுவர். இடையருது ஏற்பட்டு வரும் மனுேதருமங்களின் ஒட்டத்திலிருந்து சில நினைவுகள், சி ந் த னை க ள் , கருத்துக்கள் மட்டும் ஒன்றுசேர்ந்து ஒரே சித்திர மாகத் தோன்றுவதும் உண்டு. அவ்வாறு ஏற்பட்ட ஒரு சித்திரமே "நான் என்பது. மற்றைப்படி நான்' என்பதற்கு ஆதாரமாக, என்றும் நிலையாயுள்ள ஒரு பொருள் மனிதன் அகத்திலோ, புறத்திலோ இல்லை. " நான் ' என்ற அகங்காரத்தையும் நிலையற்றது என்று தள்ளிவிட்டால், ம னி த ரிை ட ம் நிலையாக நிற்பது ஒன்றுமில்லை என்ருகின்றது. உடலில் ஏற்படும் மிக துணுக்கமான, சேர்க்கையான மாறுதல் களும், இரசாயன மாறுதல்களுமே வாழ்க்கை அல்லது உயிர் வாழ்தல் என்று கூறும் அளவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/104&oldid=848826" இலிருந்து மீள்விக்கப்பட்டது