பக்கம்:பௌத்த தருமம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பௌத்த தருமம்


சொற்களின் குவியலைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டே யிருக்க வேண்டாம், ஏனெனில் அதனால் மூச்சுத் தான் வீணாகும்.’ என்று ‘பிருகதாரண்யக உபநிடத’மும் கூறுகின்றது.

வேதாந்திகளைப் போலவே புத்தரும், தந்திரங்கள், கிரியைகள், சடங்குகளைக் கைவிட்டுத் தியானத்தில் நிலைத்திருக்கும் வழியைக் காட்டினார். வேதியர் ஒருவரிடம் பேசுகையில், புத்தர் பெருமான், ‘அந்தணா! அக்கினியில் சமித்துக்களைச் சொரிவதால் மட்டும் பரிசுத்தம் வந்துவிடுவதாகக் கருத வேண்டாம். ஏனெனில், அது வெளியே தான் நிகழ்வது; ஆதலால் அந்த வழியை விட்டுவிட்டு, நான் எனது அக்கினியை அகத்தினுள்ளே தான் மூட்டியிருக்கிறேன், அது என்றும் எரிந்து கொண்டிருக்கும்’ என்றுறியதை ‘சம்யுத்த நிகாயத்தி’லே காணலாம்.

ஆன்மா விஷயத்திலே மட்டும் புத்தர் ‘உபநிடதங்கள்’, ‘பகவத் கீதை’ முதலிய நூல்களிலிருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டார். அவர் அறிவுறுத் திய உண்மை அநான்மா என்பது — அவருடைய முன்னோர்களிலே பெரும்பாலோர் கொண்டிருந்த கொள்கைக்கு அது நேர் விரோதமானது’.[1]

மகரிஷிகள் ஆன்மா ஒன்றே நித்தியமானது என்று கொண்டாடினார்கள். அதுவே சாரத்தை இடமாகக் கொண்ட சரீரி என்று அவர்கள்


  1. 'The truth he propounded is Anatman-a doctrine diametrically opposite to that held by most of his prodecessors.)' —The Basic conception of Buddhism' by villhurlickara Battacharya.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/109&oldid=1386908" இலிருந்து மீள்விக்கப்பட்டது