பக்கம்:பௌத்த தருமம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பௌத்த தருமம்


அகம் அல்லது ஆன்மா உளது என்பதைப் புத்தர் அறவே மறுத்து, அதனால் ஆசைக்கு இருப்பிடமாக அமையக்கூடிய அடிப்படையையே அகழ்ந்து எறிந்துவிட்டார்' என்று திரு. விதுசேகர பட்டா சாரியா தமது ‘பௌத்த தருமத்தின் அடிப்படைத் தத்துவம்’ என்ற நூலில் கூறியுள்ளார்.[1]

புத்தர் வகுத்துக்காட்டிய பன்னிரு நிதானங்களையும் கவனிக்கையில், உலகப் பொருள்கள், உயிர்கள் ஆகிய எதில் பற்று வைத்தாலும், அந்தப் பற்றினாலேயே துக்கம் வளர்வதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். எதுவும் நிலையற்றிருப்பதால், அவன் அந்த நிலையாமையை நன்குணர்ந்து பற்றை அறுத்துக் கொள்ளவேண்டும் என்பது அவர் கருத்து. இதற்கு நேர் மாறாக, அவனுடைய அகத்திலேயே, என்றும் அழியாத, ஒளிமயமான ஆன்மா உளது என்று சொல்வதால், நித்தியமான அந்த ஆன்மாவைக் கருதி, அதற்காக அவன் பற்றுக் கொள்ளத்தக்க அடிப்படை அமைந்து விடுகின்றது. நான் என்ற பொய்மையான அகங்காரத்தை அகற்ற வேண்டும் என்பதை முன்னோர்களும் அழுத்தமாகக் கூறிவந்தார்கள். ஆனால் போலியான அந்த ஆணவத்திற்குப் பதிலாக, நிலையான ஆன்மாவைப் பற்றிய கொள்கையை அவர்கள் புகுத்தி விட்டார்கள்.

புத்தருக்குப் பின்னால் தோன்றிய பௌத்த ஆசிரியர்கள் பலரும் இதைப்பற்றி விரிவாக எழுதி


  1. Thus and in various other ways, the existence of A permanent Self or Atman, as accepted by other systems, Was utterly denied by Buddha, thereby pulling down the very foundation of desire where it can rest.' –'The Basic conception of Buddhism'- by Vidhu. shekara Battacharya.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/113&oldid=1386922" இலிருந்து மீள்விக்கப்பட்டது