பக்கம்:பௌத்த தருமம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 109 - யுள்ளனர். உதாரணமாக அசுவகோஷர் கூறி யிருப்பதாவது தவருன சித்தாந்தங்கள் யாவும் இந்த ஆன்மா உளது என்னும் கொள்கை காரண மாகவே எழுந்தவை. இதிலிருந்து நாம் விடுபட்டு விட்டால், தவருன சித்தாந்தங்கள் ஏற்பட இட மிராது." ஒரு பொருளைக் க ண் ணு ல் பார்த்தறியும் காட்சியை உதாரணமாய்க் கொண்டு, காண்போளுகத் தனியாக ஒருவன் இல்லை என்பதை நாகசேனர் தமது மிலிந்தன் பிரச்னைகள்' என்ற நூலில் விளக்கியுள்ளார். அவர் கூறியுள்ளது. இது: 'கண்ணுக்கும் உருவத்திற்கும் உரிய சம்பந்தத்தில்ை காட்சி உணர்ச்சி எழுகின்றது, அதே நேரத்தில் அத்துடன் (ஸ்பரிசம் என்ற) தொடர்பும், (வேதனை என்ற) உள்ள உணர்ச்சியும், (பொருளைப் பற்றிய) கருத்தும், சிந்தனை பற்றிய உணர்வும், கவனமும் ஏற்படுகின்றன-இந்தத் தருமங்கள்-விருத்திகள்யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு எழுந்தவை, ஆளுல் 'காண்பவன்' என்று தனியாக ஒன்றைக் காண வில்லை." நவீன ஆசிரியர்களில் பேராசிரியர் இலட்சுமி ந. சு. ஆன்மா பற்றிய பெளத்தக் கொள்கையை ஆராய்ந்து, தருமத்தின் முதன்மையான நன்மை, மனிதனின் தனிப் பண்பு, பிரபஞ்சத்தின் புதிர் என்ற தலைப்புக்களோடு விவரமாக எழுதியுள்ளார். 'பார்த்து அறியக் கூடிய பிரபஞ்சத்திற்கு வெளியே எதுவுமில்லை என்றும், இந்தப் பிரபஞ்சம் முழுதும் மானளகே நிகழ்ச்சிகள், அல்லது தருமங்களின்

  • 'சிாக்கோற்பாக குத்திாம்.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/114&oldid=848848" இலிருந்து மீள்விக்கப்பட்டது