பக்கம்:பௌத்த தருமம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

பெளத்த தருமம்


குருதேவராகிய பாத்வர், ‘நான் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன், ஆனால் நீதான் புரிந்து கொள்ளவில்லை.–உபசாந்தோயம் ஆத்மா!’ என்று கூறினராம்.

அதுபோல், சில சமயங்களில், சில வினாக்களுக்கு மெளனமே தக்க பதிலாகும் என்பதைப் பிற்காலத்திலிருந்த நாகசேனரும் குறிப்பிட்டுள்ளார். ‘மலடியின் மகன் கறுப்பா, வெண்மையா?’ என்பது போன்ற வினாக்களுக்குப் பதிலளிக்கக்கூடாது என்று அவர் விளக்கியிருக்கிறார். ‘கந்தங்களும் ஜீவனும் ஒன்றுதானா ?’ என்பதும் அத்தகைய கேள்வி என்பது அவர் கருத்து. பால், சர்க்கரை, தேன் போன்றவைகளின் இனிப்பிலுள்ள வேற்றுமைகளைக் கலைமகளேகூட விளக்க முடியாது. அவைகளை யெல்லாம் ஒருவர் தமது அநுபவத்தின் மூலமே உணர்ந்துகொள்ள வேண்டும்.

மனித வாழ்வு மிகவும் சுருக்கமானது. அறிய வேண்டிய மார்க்கத்தை அறிந்தபின், ஐயங்கள், திரிபுகளுக்கு இடமில்லாமல், ஒருவன் பயிற்சியில் இறங்கிச் செயலாற்றிக்கொண்டே யிருக்கவேண்டும். செயலிலேயே பல ஐயங்கள் தீர்ந்துவிடவும் கூடும். அதைவிட்டு, வெறும் ஆராய்ச்சியிலும், விவாதத்திலும் இறங்குவோன், தன் ஆயுள் முழுவதும் சருகு அரித்துவிட்டுக் குளிர்காய நேரமில்லாமலே போய்ச் சேருவான்.

புத்தர் காலத்தில் பலவிதமான கொள்கைகள் சமயப் போர்வைகளுடன் நாட்டில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு சமயாசாரியரும் பல சீடர்களைச் சேர்த்துக்கொண்டு நாட்டில் சுற்றி வந்தார். இவர்களுடைய சந்தடிகளின் நடுவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/119&oldid=1386882" இலிருந்து மீள்விக்கப்பட்டது