பக்கம்:பௌத்த தருமம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 121 புத்தரைச் சம்சயவாதி (agnostic) என்ருே, சூனியவாதி (nihilist)என்ருே கருதுதல் அவருடைய உபதேசத்தின் முக்கியமான பகுதியை இழப்பதாகும் என்று டாக்டர் எஸ். இராதாகிருண் ண ன் கூறியுள்ளார். உலகின் நிலையாமையையும், துயரத்தையும் கண்டு அவைகளுக்கு மாற்ருக நிலையான இன்பமுள்ள இடம் ஒன்றை அவர் அறிந்திருந்தார் என்றும், அந்நிலையை உலக வழக்கிலுள்ள சொற்களால் எளிதாக விளக்க முடியாது என்பதால் அவர் மெளன மா யிருந்துவந்தார் என்றும் கருதவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புத்தர் நாத்திகரல்லர் என்பதே அவர் முடிபு. உலகில் எல்லாம் மறை வனவா யிருந்தபோதிலும், மறையாது நிற்பது ஏதோ உளது. அது உலகிலே இயற்கை நியதி யாகவும், ஆன்மிக நியதியாகவும் வெளித் தோன்று கின்றது, அது மாறிக்கொண்டேயிருக்கும் பிரபஞ் சத்தின் தன்மைக்கு மேம்பட்ட நிலையாகும்' என்றும், தருகத்தைத் தேர்ந்து கண்டு கொள்வதே மெய்ஞ் ஞானம் பெறுதல்’ என்றும், இந்த நுண்ணறிவு மனத்தை வெளியுலகப் பிரித்தியட்ச நிலையிலிருந்து இழுத்துக் கொண்டு சாந்தி நிலையில் வைத்திருப்ப தால் பெறப்படும்' என்றும் அவர் கூறியுள்ளார். * மேலும், உபநிடதங்கள் பிருமம் என்று அழைப்பது நிலையான உண்மைப் ခိပ္ခ်ိ (reality ) Grorusogala • ‘Though everything in this empirical universe is passing, there is something which does not pass. It expresses itself in the world as natural and spiritual law, which is the transcendental character of the empirical universe....Insight into dharma is enlightenment....This insight is attained by keeping the mind in a state of repose and detatchment from the outward reality." –“Gautama the Buddha" — by Dr. S. Radhakrishnan. |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/126&oldid=848873" இலிருந்து மீள்விக்கப்பட்டது