பக்கம்:பௌத்த தருமம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பெளத்த தருமம்



புத்தர் பல இடங்களில் குறிப்பாக உணர்த்தியுள்ளார் என்றும், அதையே அவர் தருமம் என்று வேறு பெயரால் குறித்தார் என்றும், உலகியல் முறையிலே நமக்கு ஒழுக்கத்தின் உயர்வைச் சிறப்பாக எடுத்துக் காட்டுவதற்காகவே அவ்வாறு செய்தார் என்றும், புத்தர் இலட்சியத்தைப் பார்க்கினும் மார்க்கத்தை அதிகமாக வற்புறுத்தி வந்தார் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

அமெரிக்காவில் பல்லாண்டுகள் தத்துவப் பேராசிரியராக இருந்த, கல்விமானும் கலைஞருமான காலஞ்சென்ற திரு. ஆனந்தகுமாரசாமியும் மேற்கூறிய பேராசிரியரைப் போலவே அபிப்பிராயப்பட்டிருக்கிறார்.

'ஒருவன் தனக்குத் தானே தலைவன், தனக்குத்தானே புகலிடம். ஆதலால் வணிகன் உயர்ந்த குதிரையை அடக்கிப் பழகுவதுபோல உன்னை நீயே அடக்கிப் பழகவும்.' (தம்மபதம், 380)

என்ற வாக்கியத்தில் 'தனக்குத்தானே தலைவன்' என்பதில் முதலாவது 'தான்' 'நான்' என்ற ஆணவத்தைக் குறிக்கும் என்றும், இரண்டாவது 'தான்' மேலான நித்தியமான ஆன்மாவைக் குறிக்கும் என்றும், இவ்வாறே இது போன்ற பிற இடங்களிலும் பொருள் கொள்வதே பொருத்தமாயிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒவ்வோர் உடலுக்குள்ளேயும் ஒரு நித்தியமான ஆன்மா தங்கியிருப்பதாகக் கருதும் கொள்கையையே புத்தர் மறுத்தார் என்றும், என்றும் நிலையாயுள்ள ஒன்றை அவர் மறுக்கவில்லை என்றும் அவர் கருதுவர். பரம்பொருள், ஆன்மா, நித்தியத்துவம் ஆகிய மூன்றில், புத்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/127&oldid=1386892" இலிருந்து மீள்விக்கப்பட்டது