பக்கம்:பௌத்த தருமம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 123 எதையுமே மறுக்கவில்லை என்று அவர் குறித் துள்ளார். * டாக்டர் ஹரிசிங் கோர் தமது பெளத்தத்தின் உட் பொருள்' என்ற நூலில் குறிப்பிடுவதாவது: "அவருடைய (புத்தருடைய) சித்தாந்தத்தில் ஆன்மா உண்மை ஒரு முக்கியமான அமிசமாகும். ஏனெனில் அவர் தமது மறுபிறப்புக் கொள்கைக்கு அதையே ஆதாரமாய்க் கொண்டார்......... 'பொருள் அ னை த் தி லு ம் நிறைந்துள்ள பிரபஞ்ச சக்தி இருப்பதைப் புத்தர் நிச்சயமாக அங்கி கரித்துள்ளார். அந்தச் சக்தி, தன் இயக்கங்கள் யாவிலும், பிரபஞ்சம் அனைத்திற்கும் பொதுவான தித்தியமான, தவிர்க்க முடியாத நியதியால் ஆட்சி செய்யப் பெறுவது.' புத்தர் தருமவாதி - சத்தியவாதி - ஆதலால் அவர் எவரையும் எதையும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவில்லை. தாம் தம் வாழ்க்கையில் அறிந்து அநுபவித்ததை மக்களுக்குக் கூறி, அவரவரை வந்து

  • "In short, it is quite certain that the Buddha neither denied a God, denied a Soul, (nor) denied Eternity."

-‘Gotama the Buddha'-by Ananda K. Coomaraswamy. † Indeed, the existence of Soul was an integral part of his (Buddha's) system, for upon it he based his theory of reincarnation “”

  • Buddha had certainly granted the existence of Universal Energy which permeated all matter and was in all its movements controlled by an eternal universal inexorable law."

-"Spirit of Buddhism"—by Dr. H. S. Gour.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/128&oldid=848877" இலிருந்து மீள்விக்கப்பட்டது