பக்கம்:பௌத்த தருமம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பெளத்த தருமம்



பார்த்து உண்மையை உணர்ந்துகொள்ளவே அவர் அழைத்தார். மன, மொழி, மெய்களுக்கு எட்டாத விஷயங்களை, அவைகளைத் தவிர வேறு துணையில்லாத மக்களிடம் கூறினால், ஒன்று இருக்கிற அறிவும் குழம்பும், அல்லது ஆராய்ச்சி யில்லாமல் எதையும் நம்பக் கூடிய இயல்பு பிறக்கும். பிறகு அவரவர் மனம் போன போக்கில் கற்பனைகளே மிகுந்துவிடும். உளதாய், இலதாய், உளதும் இலது மாய், உளதன்றுமாய், இலதன்றுமாய் என்று வருணிக்கப்படும் நான்கு நிலைகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியைப்பற்றி மானிட அறிவால் யார், எவ்வளவு, தெரிந்து கொள்ள முடியும்? 'உயர்ந்தோருக்குத் தலைசிறந்த அல்லது பிரபஞ்ச நிலைக்கு மேலான உண்மை மௌனமே' * என்று சந்திர கீர்த்தி என்ற உரையாசிரியர் கூரியுள்ளார். பரத்தைப் பற்றி உண்மை ஞானிகள் எதுவும் கூறமாட்டார்கள், மௌனமாகவே இருப்பார்கள்.

புத்தரும் அவ்வாறே மௌனமா யிருந்து வந்தார். ஆனால் நாற்பத்தைந்து ஆண்டுகள் அவர் அவ்வாறு மௌனமாயிருந்த போதிலும், அவருக்குப் பின்னால் வெகு விரைவிலேயே பல வகைப்பட்ட தத்துவங்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. அதனால் பௌத்த தருமமும் சில பிரிவுகளாகப் பிரிய நேர்ந்தது.

புத்தர் தத்துவங்களை விட்டுப் பிரத்தியட்ச நிலைமைகளைப் பார்த்து உண்மையை உணரச் சொல்லிவந்ததாலேயே. ஒழுக்கம் நிறைந்த ஒரு


  • 'மூலமத்தியமக - காரிகை'யின் உரை - சந்திர கீர்த்தி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/129&oldid=1386896" இலிருந்து மீள்விக்கப்பட்டது