பக்கம்:பௌத்த தருமம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

பெளத்த தருமம்



இப்பிறப்பின் வினைப்பயனை அடுத்த பிறவியில் அநுபவித்தல், முற்பிறப்பிலிருந்து வந்ததை மாற்ற முடியாது; இப்பிறப்பில் எச்சரிக்கையாயிருந்து, தீய வினைகளை விலக்கி, நல்வினைகளைப் பெருக்கி, அடுத்த பிறவிக்கு வேண்டிய நற்பயன்களைப் பெறக்கூடிய சுதந்திரம் மனிதனுக்கு இருக்கத்தான் செய்கின்றது. மேலும் கரும நியதி வாழ்வின் எல்லா அமிசங்களையும் பாதித்து நிற்பதுமில்லை. அதன் பயனை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்பது தான் விதி. ஆகையினால், 'எல்லாம் தலை விதி!' என்று சொல்லிக்கொண்டு, மனிதன் செயலற்றுக் கிடப்பது அறிவீனமேயாகும் அவன் தானாகப் படைத்துக் கொள்வதே கருமத்தான் பயன்.

மேலும் முற்பிறப்பின் கருமப் பயனை முழுதும் மாற்ற முடியாது என்பதில்லை. இப்பிறப்பில், மிக உன்னதமான முறையில், கருத்தோடு வாழ்க்கையை நடத்தி, நன்னெறியிலே நின்றால், இந்த வினைப் பயனைக் கொண்டு முந்தியதையும் ஓராபையாற்றிக் கொள்ள முடியும்.

உலகிலுள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கும் மக்களுடைய கருமப்பயனே காரனம். ஆனால் எதிர் காலத்தில் நன்மை பெறக்கூடிய கருமப்பயனை அவர்கள் இப்போது தேடிவைத்துக் கொள்ள உரிமை பெற்றிருக்கிறார்கள். நல்வினைகளின் பயனை அடையாமல் தடுக்கும் சக்தியும் உலகிலில்லை; தீவினைகளின் பயனை மன்னித்துவிடவேண்டும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/133&oldid=1386903" இலிருந்து மீள்விக்கப்பட்டது