பக்கம்:பௌத்த தருமம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

133



உலகில் எதுவும் காரணமில்லாமல் தோன்றுவதில்லை. உயிர்களின் நிலைமைக்குக் காரணமாக விளங்குவது கரும நியதி. இதைக் குற்றத்திற்குரிய தண்டனையாகவோ, நற் செயலுக்குரிய பரிசாகவோ கருதுவதற்கில்லை. அவனவன் செயலின் பயனே கரும விதியாகச் சேர்ந்து விடுகின்றது. இதுவே அடுத்த பிறப்பின் செயலுக்கு மூலகாரணமாகின்றது. மனிதன் கரும விதிக்கு உட்பட்டவன் தான்; ஆனால் அவனே அக்கருமத்தின் கருத்தாவாகவும் விளங்குகிறான். அவன் தான் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றபடியே இன்ப துன்பங்களை அனுபவிக்க நேருகின்றது.

கரும விதி ஐந்து நியாமங்களாகப் பௌத்த தருமத்தில் பிரித்து விளக்கப்பட்டிருக்கின்றது. அவை கரும நியாமம், உது நியாமம், பீஜ நியாமம், சித்த நியாமம், தரும நியாமம் என்பவை.

செய்கைக்கு ஏற்ற பயன் விளைவதைக் கரும நியாமம் என்றும், ஜடப் பொருள்களின் நியமங்களை விளக்குவது உது நியாமம் என்றும், வித்திலிருந்து செடி முளைப்பது போன்ற நியமத்தைப் பீஜ நியாமம் என்றும், மன உணர்ச்சிகள் சம்பந்தமான ஒழுங்கினைச் சித்த நியாமம் என்றும், புத்தர் பெருமானின் வாழ்க்கையில் நேர்ந்த பூமியதிர்ச்சி போன்ற அற்புதங்களை விளக்குவது தரும நியாமம் என்றும் கூறப்படுகின்றன.

வினைப்பயன் - கருமத்தின் விளைவு - விட்டு நீங்காது என்பதை நன்குணர்ந்தவர்கள், இந்த வாழ்விலேயே உள்ளத்தைச் செம்மையாக வைத்துக்கொண்டு, நற்கருமங்களையே செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/138&oldid=1386921" இலிருந்து மீள்விக்கப்பட்டது