பக்கம்:பௌத்த தருமம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பெளத்த தருமம்



வருவார்கள். தானம், சீலம், பாவனை என்று வகுக்கப்பெற்ற ஈகை, ஒழுக்கம், தியானங்களால் அவர்கள் புண்ணியங்களைக் கருவூலமாகச் சேர்த்து வைத்துக் கொள்வார்கள். ஈகையால் பெறக்கூடிய முதல் இன்பத்தை வள்ளுவர் 'ஈத்து உவக்கும் இன்பம்' என்று கூறுகிறார். ஒழுக்கம் என்ற சீலங்களைப் பற்றிப் பௌத்த தருமத்திற்கு மேலாக வேறு எந்த மார்க்கமும் உபதேசித்ததில்லை; பௌத்தமே சீல மார்க்கம் எனலாம். பாவனைகள் மைத்திரி பாவனை, கருணா பாவனை, முதித பாவனை, அசுப பாவனை, உபேட்சா பாவனை என முக்கியமாக ஐந்து வகைப்படும். இவை முறையே அன்பையும், தயையையும், ஆனந்தத்தையும், உடலின் அசுத்தத்தையும், சமதிருஷ்டியோடு விருப்பு வெறுப்பற்று இருத்தலையும் குறிக்கின்றன.




"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/139&oldid=1386936" இலிருந்து மீள்விக்கப்பட்டது