பக்கம்:பௌத்த தருமம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் இயல்

      நிருவாணம்

'அருள் நெறியால் பாரமிதை ஆறைந்தும் உடனடக்கிப் பொருள்முழுதும் போதியின் கீழ் முழுதுணர்ந்த முனிவரன் தன் அருள்மொழியால் நல்வாய்மை அறிந்தவரே பிறப்பறுப்பார், மருள் நெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ!'

            -சித்தாந்தத் தொகை

நிருவாணம் என்ற சொல் இயக்கமின்மை, அவிதல், அணைதல் என்ற பொருள்களுள்ளது. வாழ்க்கை காற்றைப்போல் சலனமுள்ளதாக இயங்கிக் கொண்டே யிருப்பது. நிருவாணம் சலனமற்ற, கிளர்ச்சியற்ற, குழப்பமற்ற சாந்திநிலை. அணைதல், அவிதல் என்ற பொருள்களில், அது காமம் முதலிய விகாரங்கள் அழிதலைக் குறிக்கும். பெளத்த தருமத்தின்படி நிருவாணமே வீடு பேறாகும். உபநிடதங்களிலும், கீதையிலும் முக்தி என்ற பொருளிலே நிருவாணம் என்று கூறப்பெற்றுள்ளது. விகார உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெறுவதுடன், பரம்பொருளோடு ஐக்கியமாவதையும் அச்சொல் குறிக்கும். விளக்கிலே எண்ணெய் உள்ளவரை தீபம் எரியும்; எண்ணெய் தீர்ந்தவுடன் சுடரும் அவிந்து விடுகின்றது. விறகு இருக்கும்வரை தீ எரியும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/140&oldid=1234051" இலிருந்து மீள்விக்கப்பட்டது