பக்கம்:பௌத்த தருமம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிருவாணம்

145



போரிடுவதைக் காண்கையில், அவர்களுடைய வீரத்தினால் அவர் களிப்படைகிறார், அவர்களுக்குப் பலவிதமான பரிசுகள் அளிக்கிறார். நீங்களே (சீடர்களே) ததாகதரின் படை வீரர்கள், தீவினைகளுக்கு அதிபதியான மாரனே பகைவன், அவனை வெல்ல வேண்டியதே அவசியமான வேலை. ததாகதர் தம் படைவீரர்களுக்குத் தருமராஜ்யத்தின் மாபெரும் தலைநகரமான நிருவாண நகரை அளிப்பார்........'

நிராசையே நிருவாணம்

மேலே கூறியவற்றிலிருந்து நிருவாணம் எல்லாம் அழிந்த சூனிய நிலையன்று என்பது தெளிவாகும். அது காமத்தின் அழிவு, குரோதத்தின் அழிவு, உலோபத்தின் அழிவு, மோகத்தின் அழிவு. பிறப்புக்குக் காரணமான சார்புகளில் (நிதானங்களில்) முதன்மையான பேதைமைக்கு மாற்றாயுள்ளது அது; நிருவாணம் என்பது மெய்ஞ்ஞானமே. ஆசை அற்றுப் போகும் நிலையில், ஆணவம் அழிவுறும் நிலையில், அந்தப் பேறு கிடைக்கின்றது. "இது நான்" என்று கருதாமையே விடுதலை* என்று புத்தர் பிரான் கூறினார். "நான் இருக்கிறேன்" என்ற எண்ணத்தை அழித்துவிட்ட பொழுது, பிக்கு தீயிலிருந்து வெளியேறுகிறான் ' + என்றும் அவர் எடுத்துக் காட்டினார். ஆகவே, சுருக்கமாய்க் கூறினால், 'நான்' என்ற ஆணவத்தை அடியோடு அழித்து, ஞாலம் முழுவதையும் தான் எனக் கருத ஆரம்பித்துத் தன்னையும் உலகையும் ஒன்றாக எண்ணும் நிலை நிருவாணமாகும்.


  • 'உதானம்'

+ 'அங்குத்தர நிகாயம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/152&oldid=1386791" இலிருந்து மீள்விக்கப்பட்டது