பக்கம்:பௌத்த தருமம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பெளத்த தருமம் தன்னைத் தான் அறிதல் என்று சொல்லப் பெறும் முறையில் உண்மை விளக்கமாகும் பொழுது, நான் அழிந்து போகின்றது. நான் அழிந்ததும். பேதைமை விலங்கும் அறுந்து விழுகின்றது. 'நான்' என்பதன் மரணமே விடுதலை, முக்தி, நிருவான ம். அதற்குப் பின்னல், மீண்டும் பிறத்தல், ற்பத்தி யாதல், படைக்கப்பெறுதல், உருவம் பெறுதல் என்ற சம்சார பந்தத்திற்கு இடமேயில்லை. இதல்ைதான். எமது என்று எதுவுமில்லாத நாம் இன்பமாக வாழ் கிருேம்; தேசு மிகுந்த தேவர்களைப்போல் நாம் இன்பத்தைப் பருகிக் கொண்டே வாழ்வோம்! " என்று புத்தர் தம்மபத'த்தில் தெரிவித்துள்ளார். இராதா என்ற சீடருக்குப் பகவர் உபதேசிக் கையில், உண்மையிலே, இராதா, ஆசையை அழித் கலே நிருவானம் 1" என்று கூறியுள்ளார். சிறு குழந்தைகள், ஆசை இருக்கும் வரை, மணல் வீடுகள் கட்டி விளையாடியும், ஆசை மறைந்ததும், அவைகளைக் கலைத்து அழித்து விடுவதையும் உப மானமாகக் காட்டி, அதேபோல் மனிதன் ஆசை கொள்ளும் உடல், புலன்களின் உணர்ச்சிகள், மன உணர்வு முதலிய மணல் விடுகளைக் கலைத்து அழித்து விட்டு, அவைகளில் ஆ ைச ஏற்படாவண்ணம் கவனமாயிருந்து வர வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார்: நிருவான நிலையில் என்னதான் மிஞ்சி நிற் கின்றது? அதைப் பற்றிப் புத்தர் பெருமான் பரி நிருவான சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். புறத்தோற்றங்களான யாவும் ஒழிங், பிறகுதான் டியே உயிர்ன் கத்துவம் மட்டும் எஞ்சி நிற்கின்றது: அ.த பஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/153&oldid=848931" இலிருந்து மீள்விக்கப்பட்டது