பக்கம்:பௌத்த தருமம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிருவாணம்

147



இயல்புகளுக்கு அப்பாற்பட்டுச் சுதந்திரமாயுள்ளது. விறகு தீர்ந்தபிறகும், சுடர் அணைந்தபிறகும், நித்தியமான ஒளியில் எரிந்து கொண்டிருக்கும் தீ அது தான்; ஏனெனில் அந்தத் தீ சுடரிலுமில்லை, விறகிலுமில்லை. அந்த இரண்டின் உட்புறத்திலுமில்லை; ஆனால் மேலேயும் கீழேயும், எங்கும் உள்ளது அது.'

நிருவாண மார்க்கங்கள்

நிருவாணத்திற்கு உரிய வழிகள் மூன்று என்று பௌத்த நூல்களிலே கூறப்பட்டுளது. அவை ஸம்மா ஸம் போதி, பிரத்தியேக போதி, சிராவக போதி என்பவை. புத்தபகவர், தாமே முயன்று, தமக்குத் தாமே வழி காட்டிக்கொண்டு, போதி யடைந்து, தாம் பெற்ற இன்பத்தை வையகமும் பெறவேண்டு மென்று உபதேசம் செய்து மற்ற மக்களும் கடைத்தேற வழி காட்டியது ஸம்மா ஸம்போதியாகும். பிரத்தியேக போதி என்பது, ஒரு புத்தருடைய உதவியில்லாமலே, ஒருவர் தாமாக முயன்று, தாம் மட்டும் போதியடைந்து, உலகிற்கு உபதேசியாமல் தனித்திருத்தலாகும். புத்தரை வழிகாட்டியாகக் கொண்டு, பத்துப் பாரமிதைகளை - மேற் கொண்டு அருகத்துக ளாகிப் போதியடைதல் சிராவக போதி எனப்படும்.




  • தானம், சீலம், பொறுமை, வீரியம், தியானம், பிரக்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம் ஆகியவை தச பாரமிதைகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/154&oldid=1386794" இலிருந்து மீள்விக்கப்பட்டது