பக்கம்:பௌத்த தருமம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐக்கம்-இயல் பெளத்தமும் சாதிப் பிரிவினையும் 'பிறப்பினுல் எவர்க்கும் - உலகில் பெருமை வாராதப்பா! சிறப்பு வேண்டு மெனில் - நல்ல செய்கை வேண்டுமப்பா' -ஆசிய ஜோதி இந்திய நாட்டில் வேரூன்றி வளர்ந்திருந்த சாதிப் பிரிவினையை முதன்முதலில் எதிர்த்துச் சகல மக்களும் சமம் என்று போதித்தவர் புத்தபகவரே. பிறப்பிேைல பிராமணராகவோ, சண்டாளராகவோ இருக்க முடியாது என்றும், செய்கைகளும் ஒழுக்க முமே மக்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் என்றும் அவர் கூறிவந்தார். சாதிகளோடு அவர் நேரிடையாகப் போராடிக் கொண்டிருக்கவில்லை; ஆல்ை அவைகளை மதிக்காமல் புறக்கணித்து விட்டார். அவருடைய பெளத்த தருமத்தை மேற் கொள்வதற்குச் சாதியும் நிறமும் குறுக்கே நிற்க வில்லை. அத் தருமத்தை மேற்கொண்டவர்கள், பல ஆறுகள் ஒரே கடலுள் கலந்து ஒன்ருவது போல், தருமத்திலே சேர்ந்து ஒன்ருகிவிட்டனர். _ அரசர்கள், அதிகாரிகள், வேதியர், மீன் பிடிப்போர், போர்வீரர், குப்பை கூட்டுவோர் முதலிய யாவரும், சாதிவேற்றுமையின்றிப் பிக்கு களின் சங்கத்திலே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். உபாலி என்ற நாவிதர் பிக்குகளின் தலைவர்களில் ஒருவராக விளங்கி விநய ஒழுக்க முறையைக் கவனித்து வந்தார். ஸ்_நிதன் என்ற குப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/155&oldid=848935" இலிருந்து மீள்விக்கப்பட்டது