பக்கம்:பௌத்த தருமம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

151



எதிர்ப்பு

இக்காரணங்களால்தான் பிற்காலத்தில் சாதிகள் ஒரேயடியாக அழிந்துவிடாம லிருப்பதற்காக இந்து சமூகத்திலே மிகக் கடுமையான விதிகளெல்லாம் ஏற்படுத்தப்பெற்றன. ஒரு சாதியாரோடு ஒரு சாதியார் உணவு உண்ணக் கூடாதென்றும், விவாகம், முதலியவை செய்துகொள்ளக் கூடாதென்றும் சட்டங்கள் செய்யப்பெற்றன. தொழிற் பாகுபாட்டினால் ஏற்பட்டிருந்த சாதிகள், பிறப்பையும் விவாகத்தையும் அடிப்படைகளாகக் கொண்டன. ஸ்மிருதிகள். தருமசாத்திரங்கள் என்ற பெயரால் தோன்றிய சட்டங்கள், இரும்பு விதிகளாக அமைந்து, மக்கள் என்றுமே ஒன்றுசேர முடியாதபடி பிரித்து வைத்துவிட்டன. ஆதியில் 'சாதுர் வருணங்கள்' என்று தோன்றிய சாதிகள் நாளடைவில் பல்லாயிரம் சாதிகளாகக் கிளைத்துவிட்டன.

வேத காலத்தில் பிராமணர் பூணூல் அணியும் வழக்கமில்லை என்று தெரிகிறது. பின்னால் 'பிராம்மணங்கள்' தோன்றிய பிறகே அவ்வழக்கம் தோன்றியது. 'சதபதப் பிராம்மண'மும், 'கௌஷீதகி உபநிடத'முமே பூணூல் அணிவதைப்பற்றி முதன் முதலாகக் குறிப்பிட்டுள்ளன. அவற்றின்படி வேதியர் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போதும், வேள்வி செய்யும்போதுமே பூணூல் அணிந்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னால் கதிரவன் வணக்கமும், வேள்வியும் மறைந்து, இருபத்து நான்கு மணி நேரமும் பூணூல் அணியும் வழக்கம் மட்டும் நிலைத்துவிட்டது. முற்காலத்தில் பூணூல் மான்தோலினாலே முப்பிரியாக ஆக்கப் பெற்றிருந்தது: பின்னால் அது பருத்தி நூலாக மாறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/158&oldid=1386808" இலிருந்து மீள்விக்கப்பட்டது