பக்கம்:பௌத்த தருமம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

பெளத்த தருமம்



விட்டது. பௌத்தர்களிடையே இத்தகைய சாதிச் சின்னங்களுக்கு இடமில்லை.

ஏற்றத் தாழ்வுகள்

இந்து சமயத்திலிருந்து ஒவ்வொரு காலத்திலும் இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறிப் பிற சமயங்களைத் தழுவுவதற்கு மூலகாரணமானவை அதிலுள்ள சாதிப்பிரிவினையும், அப்பிரிவினையின் கொடுமையுமே. பௌத்த தருமத்திலே சாதி வேற்றுமை இல்லை என்று முதன் முதலாக முழக்கப் பெற்றதால், சமுதாயத்தின் அடித்தலத்திலே வருந்தி வாழ்ந்து வந்த தாழ்த்தப்பெற்ற மக்கள் அனைவருக்கும் அது கதிமோட்சமாகத் தோன்றியிருக்கவேண்டும்.

'நல்லகுலமென்றும், தீய குலமென்றும்
சொல்லள வல்லான் பொருளில்லை-தொல்சிறப்பின்
ஒண்பொரு ளன்றோ தவம், கல்வி, ஆள்வினை

என்றிவற்றின் ஆகும் குலம்'*

என்ற முறையில் புத்தர் ஒழுக்கத்தையே முக்கியமாகக் கூறி உபதேசித்து வந்ததால், அதன் உண்மையை அறிந்த மக்கள் யாவரும் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டனர். உண்மையில் நாட்டமுள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் பலரும் விகற்பமில்லாமல் அவருடைய உபதேசத்தை ஏற்றுக் கொண்டனர். நல்லதைச் சொன்னாலும், அதைச் சொல்லும் நல்ல முறையிலேயே வெற்றி விரைவாக


  • 'நாலடியார்'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/159&oldid=1386809" இலிருந்து மீள்விக்கப்பட்டது