பக்கம்:பௌத்த தருமம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பிரதித்ய சமுத்பாதம் - நிலையாமையுடன் ஓயாமல் மாறிக் கொண்டிருப்பதே பிரபஞ்ச இயற்கை: ஒன்றின் «Бгruг бtriлгшDIT Ф5 மற்ருென்று; அதைக் காரணமாகக் கொண்டு வேறு ஒன்று என்று மாறுவதே இயற்கை; ஆளுல் ஒன்றே மற்ருென்றக ஆவதில்லை: இந்தத் தொடர்ப்ற்ற தொடர்ச்சி'யைக் குறிப்பிடப் புத்தர் பெருமான் இந்தச் சொற்ருெடரை அமைத்தார்: @so;5 “dependent origination’ ‘discontinuous continuation" srsrrsorrib. பிரத்தியேக போதி - ஒருவர் தாம் மட்டும் போதி யடைந்து, உலகிற்குப் போதிக்காமல் தனித்திருத்தல். பிரவ்ரஜ்யை - பப்பஜ்ஜா) சங்கத்தில் பிக்குவாகச் சேரும் சடங்கு வீடற்ற வாழ்க்கையை மேற் கொள்ளல். பிராதி மோட்சம் - அமாவாசியை, பெளர்ணமி ஆகிய தினங்களில் சங்கம் கூடிப் பிக்குகளும், பிக்குனிகளும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு திருந்த உறுதி கொள்ளும் ஓர் சடங்கு அவர்களின் ஒழுக்கத்திற் குரிய விநய விதிகளடங்கிய நூலின் பெயர். பிராமணர் - வேதியர். பிராம்மணங்கள் - வேதங்களை யடுத்து இரண்டாவதாகத் தோன்றிய வசனத் தொகுப்பு நூல்கள் இவற்றைத் தொடர்ந்து ஆரண்யகங்களும், உபநிடதங்களும் தோன்றின. பிருமம் - பிரமம், பரம்பொருள். புக்கலம் - ஆன்மா அல்லது உயிர். புங்கி - புகழுக்குரியவர், பர்மிய தேரர். புத்தர் - போதியடைந்த கெளதம புத்தர். புத்தர்கள் - பல பிறவிகளில் சிலங்கள் பேணிப் போதி சத்துவராயிருந்து.மெய்ஞ்ஞானம் பெற்றவர்கள். பேதைமை - அறியாமை, அவித்தை. பொருளியல் வாதி - பெளதிகவாதி. பொறிகள் - மனத்தோடு சேர்ந்து ஆறு பொறிகள். போதி - மெய்ஞ்ஞானம். போதிசத்துவர் - புத்த நிலைக்கு உரிய தகுதியை அடைந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/16&oldid=848945" இலிருந்து மீள்விக்கப்பட்டது