பக்கம்:பௌத்த தருமம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

153



ஏற்படக்கூடும். புத்தர் துவேஷங்களையும், குரோதங்களையும் கிளப்பிவிடாமல், தமது கருத்தைச் சாந்தமான முறையிலே மக்களின் மனங்களில் பதிய வைத்ததால், அவர் சாதிகளின் ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்க முடிந்தது. மக்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு வேலை வாங்கும் முறையையும் கருணை மிகுந்த புத்த பகவர் நீக்கினார்.

'சாம்பலுக்கும் பொன்னுக்கும் குறிக்கத் தகுந்த வேற்றுமை உண்டு; ஆனால் ஒரு பிராமணனுக்கும் சண்டாளனுக்கும் அத்தகைய வேற்றுமை எதுவுமில்லை. காய்ந்த கட்டையைக் கடைவதில் எழும் தீயைப்போல் பிராமணன் உண்டாக்கப் பெறவில்லை; அவன் வானத்திலிருந்து இறங்கி வரவில்லை, காற்றிலிருந்து தோன்றவில்லை, பூமியிலிருந்தும் துளைத்துக்கொண்டு மேல் வரவில்லை. சண்டாளன் எவ்வாறு தோன்றினானோ, அதுபோலவே பிராமணனும் ஒரு ஸ்திரீயின் கருப்பையிலிருந்து பெறப்பட்டவனேயாவான். எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான அங்கங்களைப் பெற்றிருக்கின்றனர்; எள்ளளவு வித்தியாசமும் இல்லை. அவர்களை வெவ்வேறு வர்க்கங்கள் என்று எப்படிப் பிரித்துக் கருத முடியும்? மனித குலத்திலே எத்தகைய குறிப்பிட்ட வேற்றுமையும் உளது என்று கருதுவதை இயற்கை மறுத்துக் காட்டுகின்றது,'

மேலே குறித்துள்ளதே புத்தர் கொள்கை, எல்லாச் சாதியார்களும் அவருக்கு ஒன்றுதான், வான மண்டலத்திலிருந்து யாவர்க்கும் பொதுவாக மழை பொழியும் மேகம்போல, அவர் எல்லா மக்களை யும் சமமாகக் கருதித் தண்ணருள் பொழிந்து வந்தார். உயர்ந்தோர், தாழ்ந்தோர், அறிஞர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/160&oldid=1386813" இலிருந்து மீள்விக்கப்பட்டது