பக்கம்:பௌத்த தருமம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெளத்தமும் சாதிப் பிரிவினையும்

155



ஆராய்ந்து பார்க்கப் பார்க்க உண்மைகளைப் பார்க்கினும் குப்பைகளே அதிகமாகக் கண்டுபிடிக்கப் பெறுகின்றன. ஆனால் பகுத்தறிவைக் கொண்டு சாதிகளின் உண்மையை ஆராய்ந்தால், அவை தொழிற் பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதும், இந்திய நாட்டின் பூர்வ குடிமக்களும் பின்வந்த ஆரியர்களும் ஐக்கியமாகக் கலந்து, வாழ்க்கையில் சாதிகள் திட்டமான முறையில் அமைக்கப்பெற்றன என்பதும், பெரும்பாலான மக்கள் வேளாண்மையும் வாணிபமும் செய்யும் வைசியர்களாயும், மற்றைச் சாதியார்களுக்குத் தொண்டு செய்யும் சூத்திரர்களாயுமே இருந்து வந்தனர் என்றும், சிறு பான்மையோரான பிராமணரும் க்ஷத்திரியரும் சமுதாயத்தின் மேல் தட்டில் உயர்ந்த வாழ்வு நடத்துவதற்குரிய பல வசதிகளும் பெற்று விளங்கினர் என்றும் தெரியவரும். முற்காலத்துச் சாதி வரலாற்றை விளக்கச் சரித்திரம் அதிகத் துணையாக இல்லை. முன் ஒரு காலத்தில் சாதிப்பிரிவினை சமூகத்திற்கு நன்மையாகவே திகழ்ந்து, பின்னால் அது சீரழிந்துவிட்டதாகப் பல அறிஞர்களும், ஆசிரியர்களும் கூறுவது வழக்கமா யிருந்துவருவதைக் கண்டு, இக்காலத்தில் திரு. கே. எம். பணிக்கர் போன்ற ஆசிரியர்கள், 'எந்தக் காலத்தில் நன்மையாகத் திகழ்ந்தது?' என்று கேள்வி கேட்கின்றனர்.

சாதிப் பிரிவினையால் சமுதாயத்திலே ஏற்றத் தாழ்வுகள் தோன்றி நிலைத்ததோடு, சாதிப் பிரிவினையைச் சமயத்தோடும் பிணைத்துவிட்டதால், பெருமபாலான மக்களின் சமய வாழ்வும் பாழ்படுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/162&oldid=1386815" இலிருந்து மீள்விக்கப்பட்டது